பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் எண்ணெய்க்கு விலக்கு கொடுங்க! மத்திய நிதி அமைச்சருக்கு வேண்டுகோள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : ''தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை அதிகரிப்பதால், லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். தேங்காய் எண்ணெய்க்கான வரிவிதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சருக்கு, பொள்ளாச்சி எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார்.தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி., விகிதம் அதிகரித்துள்ளதற்கு, விவசாயிகள், கொப்பரை

பொள்ளாச்சி : ''தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை அதிகரிப்பதால், லட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். தேங்காய் எண்ணெய்க்கான வரிவிதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும்,'' என, மத்திய நிதி அமைச்சருக்கு, பொள்ளாச்சி எம்.பி., கடிதம் அனுப்பியுள்ளார்.

தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி., விகிதம் அதிகரித்துள்ளதற்கு, விவசாயிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:

ஒரு லிட்டருக்கும் குறைவான, 'பேக்' செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்க்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., மற்றும் ஒரு லிட்டருக்கு மேற்பட்ட எண்ணெய்க்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கதீர்மானிக்கப்பட்டுள்ளது.'தென்னையின் தலைநகரம்' என்று அடையாளப்படுத்தப்படும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளான ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக தென்னை விவசாயம்உள்ளது.

ஏற்கனவே, வெள்ளை ஈ தாக்கம், கேரள வாடல் நோய் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, நிலையற்ற தேங்காய் விலை உள்ளிட்டவற்றால், தென்னை சாகுபடி தள்ளாட்டத்தை சந்தித்துள்ளது.இந்நிலையில், தேங்காய் எண்ணெய்க்கான வரியை அதிகரித்தால், அதன் நுகர்வு குறைந்து, தேங்காய் விலை மேலும் சரிவை சந்திக்கும்.

இது, நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல லட்சம் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். எனவே, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி., உயர்வை ரத்து செய்யவதுடன், அதற்கான வரியை முழுமையாக நீக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X