பொது செய்தி

தமிழ்நாடு

'4 ஜி' சேவை துவக்க வேண்டும்; ஊழியர் மாநாட்டில் வலியுறுத்தல்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த பி.எஸ்.என்.எல்., ஊழியர் மாநாட்டில், நிறுவனத்தில் '4 ஜி' சேவை துவங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சிபி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், நேற்று காலை நிறுவனத்தின் ஓய்வூதியர்கள் சங்க மாநாடும், அதனை தொடர்ந்து, ஊழியர்கள் சங்க கிளை மாநாடும்நடந்தது.ஓய்வூதியர்சங்க மாநாட்டில், சங்க கிளைத்தலைவர் சசிதரன்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த பி.எஸ்.என்.எல்., ஊழியர் மாநாட்டில், நிறுவனத்தில் '4 ஜி' சேவை துவங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சிபி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், நேற்று காலை நிறுவனத்தின் ஓய்வூதியர்கள் சங்க மாநாடும், அதனை தொடர்ந்து, ஊழியர்கள் சங்க கிளை மாநாடும்நடந்தது.ஓய்வூதியர்சங்க மாநாட்டில், சங்க கிளைத்தலைவர் சசிதரன் தலைமை வகித்தார். கிளைச்செயலர் சிவசாமி, மாவட்டச் செயலர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். ஊழியர்கள் மாநாட்டில், தொழிற்சங்க கிளைத்தலைவர் சாகுல்அமீது தலைமை வகித்தார். கிளைச்செயலர் பிரபகாரன், மாவட்டச் செயலர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில், 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவப்படிகளை உடனடியாக வழங்க வேண்டும்.பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

'நீட்' தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீட்டை, 100 சதவீதமாக மாற்றியதை 'வாபஸ்' பெற வேண்டும்.நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்பை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும். நிறுவனத்தில், '4ஜி' சேவையை உடனடியாக துவங்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X