பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் சத்துணவு சாப்பிடுவதை ஊக்கப்படுத்துங்க! தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை

Added : செப் 29, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதை ஊக்குவிப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.தெற்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்
 மாணவர் சத்துணவு சாப்பிடுவதை ஊக்கப்படுத்துங்க!  தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதை ஊக்குவிப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தெற்கு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) ஸ்ரீதர் தலைமைவகித்தார்.

ஒன்றிய ஆணையாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டதுக்கான ஏற்பாடுகளை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) சந்தோஷம் ஏற்பாடு செய்தார். இதில், 83 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் அதிகாரிகள் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சத்துணவு சாப்பிடும் விகிதம் குறைந்து வருகிறது. இதனால், வளரிளம் பருவத்தினர், குழந்தைகளுக்கு சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க, மாணவர்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு சாப்பிடுவதை தலைமை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.சத்துணவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், களையவும், மாற்றங்கள் தேவைப்பட்டால் அவற்றை சரி செய்யவும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தெற்கு ஒன்றியத்தில், 69 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. அவற்றுக்கு உட்பட்ட பள்ளிகளில், 7,061 மாணவர்கள் பயிலுகின்றனர். சராசரியாக, 5,564 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர். அனைவரையும் சத்துணவு சாப்பிட வைக்க வேண்டும்.இன்று (நேற்று) பள்ளிக்கு வருகை தந்த (9 மற்றும் 10ம் வகுப்பு) மாணவர்களின் எண்ணிக்கை, 921 பேர். அதில், 286 மட்டுமே சத்துணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையை மாற்றி, 100 சதவீத மாணவர்கள் சத்துணவு சாப்பிட ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X