பொது செய்தி

தமிழ்நாடு

பசுமையான மரக்கன்றுகள் வெட்டிச்சாய்ப்பு ; விசாரணை நடத்த கோரிக்கை

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை : வேலை உறுதியளிப்புத்திட்டத்தில், நட்டு பராமரித்த, மரக்கன்றுகளை, வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மசக்கவுண்டன்புதுார் கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வசவநாயக்கன்பட்டி. இக்கிராமத்துக்கு, பூளவாடி பிரிவிலிருந்து, பிரிந்து செல்லும், கிராம இணைப்பு

உடுமலை : வேலை உறுதியளிப்புத்திட்டத்தில், நட்டு பராமரித்த, மரக்கன்றுகளை, வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மசக்கவுண்டன்புதுார் கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வசவநாயக்கன்பட்டி. இக்கிராமத்துக்கு, பூளவாடி பிரிவிலிருந்து, பிரிந்து செல்லும், கிராம இணைப்பு ரோடு உள்ளது.இந்த ரோட்டில், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகள் பராமரிப்புக்கு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் உட்பட பணிகளுக்கு, தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.இவ்வாறு, பல ஆண்டுகள் பராமரித்து, செழித்து வளர்ந்த, மரங்களை மர்மநபர்கள் வெட்டிச்சாய்த்துள்ளனர். இதனால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பியுள்ள மனுவில், 'மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்ட மரங்களை, வெட்டிய நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

பசுமையான மரங்களை, வெட்டுவதற்கு தடை இருந்தும், எவ்வித அச்சமின்றி இந்த சமூக விரோத செயலில், ஈடுபட்டுள்ளனர்'.'வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், அப்பகுதியில், ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக உடனடியாக மரக்கன்றுகள் நடவும் உத்தரவிட வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X