தமிழ்நாடு

மாவட்ட 'ஆவின்' நிறுவனத்தின் அலட்சியத்தால் பால் பணம் நிலுவை! வருவாயின்றி திணறி வரும் உற்பத்தியாளர்கள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை : கூட்டுறவு சங்கங்கள் வழியாக, 'ஆவின்' கொள்முதல் செய்த, பாலுக்குரிய தொகை வழங்காமல், 50 நாட்களுக்கும்மேலாக இழுத்தடிப்பதால், தீவனம் வாங்குவது உட்பட அடிப்படை செலவுக்குக்கூட பணமின்றி விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 530 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, திருப்பூர் மாவட்ட

உடுமலை : கூட்டுறவு சங்கங்கள் வழியாக, 'ஆவின்' கொள்முதல் செய்த, பாலுக்குரிய தொகை வழங்காமல், 50 நாட்களுக்கும்மேலாக இழுத்தடிப்பதால், தீவனம் வாங்குவது உட்பட அடிப்படை செலவுக்குக்கூட பணமின்றி விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 530 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனம், தினமும், 2.40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள், ஒரு லிட்டர் பால், 32 முதல், 35 ரூபாய் வரை கொள்முதல் செய்து, 10 முதல்,15 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பாலுக்குரிய தொகையை வழங்குகிறது.

உடுமலை பகுதிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. விவசாயத்திற்கு அடுத்தபடியாக, விவசாயிகளுக்கு வருவாய் கொடுத்து வரும் நிலையில், இரு மாதமாக, பால் கொள்முதல் செய்த தொகையை, கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் நிறுவனம் வழங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 530 கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, தினமும் சராசரியாக, 7.20 கோடி ரூபாய் மதிப்பிலான பால், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. 50 நாட்களுக்கும் மேலாக, பணம் பட்டுவாடா செய்யாமல், 35 கோடி ரூபாய் வரை நிலுவை உள்ளதாக, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் கூறியதாவது:பால் உற்பத்தியில், சிறிய அளவிலான விவசாயிகள் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஆதாரமாகக்கொண்டே, விவசாய குடும்பங்கள் உள்ளன. வறட்சி, சீதோஷ்ண நிலை மாற்றம், தீவன பற்றாக்குறை, அபரிமிதமாக உயர்ந்த, புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டுத்தீவனங்களின் விலை என உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.பால் பணம் கிடைத்தால் மட்டுமே, கால்நடைகளுக்கு தீவனம் வாங்க முடியும் என்ற சூழல் உள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை பணம் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் சமாளிக்க முடியும்.

திருப்பூர் மாவட்ட ஆவின் உருவாக்கப்பட்டு, இரு ஆண்டுக்கு மேலாகியும், தற்போது கட்டமைப்பு வசதிகள் உருவாக்கவில்லை.சொந்தமாக, பால் குளிரூட்டுதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி, விற்பனை என எதுவுமே இல்லாமல், கோவை மற்றும் ஈரோடு ஆவின் நிறுவனத்தை நம்பியே, திருப்பூர் ஆவின் உள்ளது.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பாலுக்குரிய தொகையை வழங்கக்கோரி, பல முறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை.

எனவே, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த பாலுக்குரிய தொகையை உடனடியாக வழங்கவும், திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனம் முழுமையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்.இவ்வாறு, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X