பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி; தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுரை

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், அக்., 9ல், நடக்கிறது. இப்பதவி இடத்தை பிடிக்க, மூன்று பேர் இடையே போட்டி நிலவி வருகிறது.ஊராட்சியில், மொத்தம், 1,211 வாக்காளர்கள் உள்ள நிலையில், மூன்று இடங்களில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலர், 3 ஓட்டுப்பதிவு அலுவலர்கள்

உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல், அக்., 9ல், நடக்கிறது. இப்பதவி இடத்தை பிடிக்க, மூன்று பேர் இடையே போட்டி நிலவி வருகிறது.

ஊராட்சியில், மொத்தம், 1,211 வாக்காளர்கள் உள்ள நிலையில், மூன்று இடங்களில், ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலர், 3 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மணிகண்டன் பேசியதாவது:

முகப்புச்சீட்டு, முகவர் சீட்டு போன்றவற்றை மிக கவனமாக பார்க்க வேண்டும். ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு, முந்தைய தினமே, ஓட்டுச்சாவடிக்குச்சென்று தேவையான ஓட்டுப்பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் உரிய படிவங்கள் வரப்பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.ஓட்டுப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு ஓட்டுப்பெட்டியைத் திறந்து காண்பித்து காலியாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் ஓட்டளித்த பின் ஓட்டுப்பெட்டிகளை பாதுகாப்பான முறையில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.குறிப்பாக, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் பணிபுரிய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X