4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது; இருவருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது; இருவருக்கு வலை

Added : செப் 29, 2021
Share
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற, நான்கு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.பொள்ளாச்சி - உடுமலை ரோடு கெடிமேடு பகுதியில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (புட் செல்) போலீசார், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கேரள பதிவுஎண் (கேஎல் 02 ஏஆர் 9178)

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற, நான்கு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது; ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி - உடுமலை ரோடு கெடிமேடு பகுதியில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு (புட் செல்) போலீசார், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கேரள பதிவுஎண் (கேஎல் 02 ஏஆர் 9178) கொண்ட சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.அந்த வாகனத்தில், தலா, 50 கிலோ எடை கொண்ட, 80 மூட்டைகளில், நான்கு டன் ரேஷன் அரிசி, கேரளாவில் கள்ளச்சந்தையில் விற்கும் நோக்கில் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த பாலக்காடு மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த முரளி, 45 என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்திய ரேஷன் அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.உடுமலை சுற்றுப்பகுதியில் ரேஷன் அரிசியை மக்களிடம் இருந்து சேகரித்து, கடத்தல் பேர்வழிகளுக்கு விற்ற, பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தை சேர்ந்த நவீன் மற்றும் வாகனத்தின் உரிமையாளரான பாலக்காடு பகுதியை சேர்ந்த ஷியாம் ஆகியோரை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X