பொது செய்தி

தமிழ்நாடு

புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்க வேண்டுகோள்

Added : செப் 29, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு : ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயரை நீக்க வருவாய்துறையும், வட்ட வழங்கல் அலுவலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் அறிக்கை:ஒருவர் இறந்து விட்டால், அவரது பெயரில் இருக்கும் சொத்துகள், ஆவணங்கள் என, அனைத்தும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.அதேபோல், வட்ட

கிணத்துக்கடவு : ரேஷன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயரை நீக்க வருவாய்துறையும், வட்ட வழங்கல் அலுவலகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் அறிக்கை:ஒருவர் இறந்து விட்டால், அவரது பெயரில் இருக்கும் சொத்துகள், ஆவணங்கள் என, அனைத்தும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.அதேபோல், வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து, ரேஷன் கார்டிலும் பெயர் நீக்கம் செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரிசு சான்றிதழ் பெற, இறந்தவரின் பெயரை நீக்கம் செய்த பிறகே, வாரிசு உரிமம் பெற முடியும் என்ற நிலையில்,ரேஷன் கார்டிலும்இறந்தவரின் பெயரைநீக்கம் செய்ய வேண்டும்.

இறந்தவரின் பெயரை ரேஷன் கார்டில் நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பல்வேறு பிரச்னைகள் உருவாகிறது.இறந்தவர்களின் பெயரில், இன்று வரை பல நுாறு ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. இது பல்வேறு வகைகளில் மோசடிக்கு வழி வகுக்கும்.எனவே, தமிழகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள கார்டுகளில், இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்கு வருவாய்துறையும், வட்ட வழங்கல் அலுவலகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X