பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.36 கோடியில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டுமானம்; பணிகள் மீண்டும் மும்முரம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்படும் ஒருங்கிணைந்த கோர்ட் வளாக பணிகள் மும்முரமாக நடக்கிறது.பொள்ளாச்சியில் தற்போது தாலுகா அலுவலக வளாகத்தில், ஜே.எம்.எண்: 1, 2 மாஜிஸ்திரேட் கோர்ட்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் செயல்படுகின்றன.சிவில், கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விசாரணையில் தாமதம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைக்கப்படும் ஒருங்கிணைந்த கோர்ட் வளாக பணிகள் மும்முரமாக நடக்கிறது.

பொள்ளாச்சியில் தற்போது தாலுகா அலுவலக வளாகத்தில், ஜே.எம்.எண்: 1, 2 மாஜிஸ்திரேட் கோர்ட்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் செயல்படுகின்றன.சிவில், கிரிமினல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விசாரணையில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியில் கூடுதலாக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோர்ட்கள் அனைத்தும், ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என, அரசுக்கும், சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, கடந்த 2016ல், கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டது.கோர்ட் வளாகம் அமையும் இடத்தை, மாவட்ட நீதிபதி பார்வையிட்டு, நில அளவுகளை இறுதி செய்து ஐகோர்ட் நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார். அதன் பின், கோர்ட் வளாக அமைப்பு திட்டமிடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதி கட்ட வரைபடத்தில், 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடக்கிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோர்ட் வளாக கட்டுமான பணி துவங்கப்பட்டது. கொரோனா பரவல், ஊரடங்கு காரணங்களால் தொய்வடைந்த பணி, தற்போது தீவிரமடைந்துள்ளது. விரைவில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, நீதித்துறை பயன்பாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என வக்கீல்கள் மற்றும் போலீசார் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X