பொது செய்தி

தமிழ்நாடு

காலிப்பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி பணியாளர் விருப்பம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை : அங்கன்வாடி மையங்களில், காலியாகவுள்ள, 13 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலையில், 143 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.தவிர, வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள்,

உடுமலை : அங்கன்வாடி மையங்களில், காலியாகவுள்ள, 13 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலையில், 143 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.தவிர, வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மொத்தம் உள்ள மையங்களில், 13 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காததால், ஒரு அங்கன்வாடி பணியாளர், கூடுதலாக வேறொரு மையத்தை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இதனால், இம்மையங்களின் பலன்களை முழுமையாகப்பெற முடியாமல் குழந்தைகள், வளரிளம் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் பரிதவிக்கின்றனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களைக்கொண்டு அங்கன்வாடி மையங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டும் வருகின்றன,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X