பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 29, 2021
Share
Advertisement
ரூ.40 லட்சத்தில் கால்நடை மருந்தகம்நெகமம், ஜக்கார்பாளையத்தில், பழைய கட்டடத்தில் கால்நடை மருந்தகம் செயல்பட்டது. சமீபத்தில் இக்கட்டடம் பழுதடைந்த நிலையில், கால்நடை மருந்தகத்தை இடம்மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.கிராமத்தில் கால்நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தமிழக அரசை தொடர்ந்து

ரூ.40 லட்சத்தில் கால்நடை மருந்தகம்

நெகமம், ஜக்கார்பாளையத்தில், பழைய கட்டடத்தில் கால்நடை மருந்தகம் செயல்பட்டது. சமீபத்தில் இக்கட்டடம் பழுதடைந்த நிலையில், கால்நடை மருந்தகத்தை இடம்மாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.கிராமத்தில் கால்நடை மருந்தகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தினர்.இதையடுத்து, தமிழக அரசு, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கால்நடை மருந்தகம் அமைக்க, ஜக்கார்பாளையத்தை சேர்ந்த விவசாயி கல்யாணசாமி, 15 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார்.சமீபத்தில், கட்டட கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது. தற்போது, கட்டட கட்டுமானப்பணி வேகமாக நடக்கிறது. பணிகள் நிறைவடைந்ததும், கால்நடை மருந்தகம் திறக்கப்படும், என, ஊராட்சி தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.

இடுபொருட்களுக்கு 50 சதவீத மானியம்

கிணத்துக்கடவு வட்டார வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு பகுதியில், உழவுப்பணிகள் துவங்கியுள்ள நிலையில், மானாவாரி விதைப்புகள் நடக்கின்றன. இந்நிலையில், முதல்வரின் நிலைக்கத்தக்க மானாவாரி சாகுபடி வளர்ச்சி இயக்கத்தின் கீழ், சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, சோளம் கே.12 ரகம், சான்று பெற்ற விதைகள், 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

விதைகளுடன், நுண்ணுாட்ட கலவை மற்றும் வறட்சியை தாங்கி வளர திரவ நிலை உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், சான்று பெற்ற தட்டைப்பயிறு விதைகள், இடுபொருள்கள், 50 சதவீத மானியத்தில், வேளாண் விரிவாக்க மையத்திலும், துணை வேளாண் விரிவாக்க மையத்திலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச மருத்துவ முகாம்

பொள்ளாச்சி சமத்துார் பேரூராட்சி, அரசுப் பள்ளி வளாகத்தில், 'ஆல் தி சில்ரன்' தன்னார்வ அமைப்பு மற்றும் பொள்ளாச்சி ராம் பாலிகிளினிக் இணைந்து, பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தின.முகாமில், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, பொது உடல் பரிசோனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. முகாமில், தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், பேரூராட்சி செயலர், டாக்டர் சகுந்தலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விவசாயிகளுக்கு இன்று முகாம்மத்திய, மாநில அரசுகள், நுண்ணீர் பாசனத்திற்கு பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம் வழங்குகிறது.

இந்த பாசனம் அமைக்க விரும்பும், ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு, சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்க, கிராம அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி, இன்று (30ம் தேதி) ஜோத்தம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் இந்த முகாம் காலை, 10:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. முகாமில் சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்க கோரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.கூடுதல் தகவல்களுக்கு, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் தாமோதரனை 96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா தெரிவித்தார்.

காணுமிடமெல்லாம் குப்பை

ஆனைமலை அடுத்த திவான்சாபுதுார் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் 'பிசி'யாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே இங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வினர், தங்களின் சாதனைகளைச் சொல்லி ஓட்டு சேகரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், வளந்தாயமரம் - சித்துார் ரோடு, குடியிருப்பு பகுதிகளில் காணுமிடமெல்லாம் குப்பை குவியல், சாக்கடைகள் அடைத்து நிற்பது, பராமரிப்பின்றி உள்ள கழிப்பிடம், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாதது என, பல பிரச்னைகள் வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணாத நிலையில், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சுகாதார நிலையத்தில் புதரால் அச்சம்

குடிமங்கலத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுப்பகுதி கிராம மக்களின் மருத்துவ தேவைக்காக, சில ஆண்டுகளுக்கு முன் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கட்டடம் அரசால் கட்டித்தரப்பட்டது.நாள்தோறும், நுாற்றுக்கணக்கானவர்கள், வெளி, உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், முறையாக பராமரிக்கப்படாமல், புதர் மண்டிக்காணப்படுகிறது.குப்பையும் முறையாக அகற்றப்படவில்லை. உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் கட்டடத்தின் அருகில், புதர் அதிகரித்துள்ளதால், விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.தொற்று பரவல் காலத்தில், பல்வேறு கழிவுகள் திறந்தவெளியில் கிடப்பதும், நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தும் சூழல் உள்ளது.எனவே, உடனடியாக, குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை துாய்மைப்படுத்த வேண்டும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு, புகார் மனு அனுப்பியுள்ளனர்.

ஓவியப்போட்டிக்கு அழைப்பு

உடுமலை கிளை நுாலகம் எண் 2ல், அக்., 2ம் தேதி காந்தி பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதேபோல், அன்றைய தினம், காமராஜ் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் இடையே காந்தி மற்றும் காமராஜர் குறித்த ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.இதில், ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். அவ்வகையில், தங்களது படைப்புகளை, நுாலகத்தில், அக்., 2ல், காலை, 10:00 மணிக்கு ஒப்படைக்கலாம்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை நுாலகர்கள், நுாலக வாசகர் வட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மா.கம்யூ., கட்சி பிரசார இயக்கம்

மடத்துக்குளம் பகுதியில், மா.கம்யூ., கட்சியினர் மோடி அரசின் மீது குற்றப்பத்திரிகை என்ற பிரசார இயக்கத்தை நடத்தினர்.தாலுகா செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப்போக்கு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும், பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்.கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரசாரம் செயயப்பட்டது. மடத்துக்குளம், அரசமரத்தடி, கழுகரை, கொமரலிங்கம், உள்ளிட்ட மக்கள் கூடும் பல இடங்களில் இந்த பிரசாரம் நடத்தப்பட்டது.

காட்சிப்பொருளாக மாறிய நடைபாதை

உடுமலை பஸ் ஸ்டாண்ட்டின் இருபுறங்களிலும், பாதசாரிகள் பயன்பாட்டுக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இதில், பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்ட நடைபாதையானது, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக மாறி விட்டது.பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சுவருக்கும், ரோட்டுக்கும், இடையில் அமைக்கப்பட்ட பாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறி காணப்படுகிறது. இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பயணிகள், ரோட்டோரத்தில், பாதுகாப்பின்றி அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களில், நடைபாதையை ஒட்டி நடந்து செல்லும் பயணிகள், விபத்துக்குள்ளாகின்றனர்.உடனடியாக நடைபாதையை சீரமைத்து, பயணிகள் பாதுாகாப்பாக ரோட்டை கடக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.4.80 லட்சம் மதிப்பில் பணிகள்

நெகமம், ஆவலப்பம்பட்டியில் மண்பாதை, மூன்று லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் ரோடாக மாற்றப்படுகிறது. அதேபோல, முருகன் கோவில் வீதியில், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது.இந்த பணிகளுக்கான நிதியை, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், தனது வார்டு வளர்ச்சி நிதியில் இருந்து ஒதுக்கினார். நேற்று இவ்விரு பணிகளும் பூமி பூஜையுடன் துவங்கியது. பணிகளை ஒன்றிய கவுன்சிலர் துவக்கி வைத்தார்.ஆவலப்பம்பட்டி ஊராட்சி தலைவர் சுபப்பிரியா, துணைத்தலைவர் கணேஷ்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X