கைகொடுத்த பருவமழை துளிர் விட்டது தேயிலை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைகொடுத்த பருவமழை துளிர் விட்டது தேயிலை

Added : செப் 29, 2021
Share
வால்பாறை : வால்பாறையில் பெய்யும் பருவமழையால், தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளன. இதனால், எஸ்டேட்டில் காணுமிடமெல்லாம் பசுமையாக காட்சியளிக்கிறது.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை மூன்று முறை நிரம்பியது. இதே போல் காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளும் நிரம்பின.கடந்த சில நாட்களாக மழை மீண்டும்
 கைகொடுத்த பருவமழை துளிர் விட்டது தேயிலை

வால்பாறை : வால்பாறையில் பெய்யும் பருவமழையால், தேயிலை செடிகள் துளிர்விடத்துவங்கியுள்ளன. இதனால், எஸ்டேட்டில் காணுமிடமெல்லாம் பசுமையாக காட்சியளிக்கிறது.

வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை மூன்று முறை நிரம்பியது. இதே போல் காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் ஆகிய அணைகளும் நிரம்பின.கடந்த சில நாட்களாக மழை மீண்டும் பெய்யத்துவங்கியுள்ளதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 596 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 92 கனஅடி தண்ணீர் வீதம், சோலையாறு அணைக்கு திறந்துவிடுவதால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.84 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 1,183 கனஅடி தண்ணீர் வரத்தாகவும், வினாடிக்கு, 1,534 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, பருவமழை பொழிவுடன், இடையிடையே வெயில் நிலவுவதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட துவங்கியுள்ளன. இதனால், எஸ்டேட்களில் காணுமிடமெல்லாம் பசுமையாக காட்சியளிக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X