அரசியல் செய்தி

தமிழ்நாடு

விட்டு கொடுப்பதே கூட்டணி: அழகிரி

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''விட்டுக் கொடுப்பது தான் கூட்டணி. ஊரக உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில், கூடுதல், குறைவு பற்றி யோசிக்கக்கூடாது; போட்டியிடும் எல்லா இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார். இதைக் கேட்ட தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், செங்கல்பட்டு மாவட்ட காங்., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், சென்னை,
 விட்டு கொடுப்பதே கூட்டணி: அழகிரி

சென்னை:''விட்டுக் கொடுப்பது தான் கூட்டணி. ஊரக உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில், கூடுதல், குறைவு பற்றி யோசிக்கக்கூடாது; போட்டியிடும் எல்லா இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார். இதைக் கேட்ட தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், செங்கல்பட்டு மாவட்ட காங்., வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், சென்னை, குரோம்பேட்டையில் நேற்று நடந்தது. அதில், அழகிரி பேசியதாவது: நாம் விட்டு கொடுப்பதும், கூட்டணியில் இருப்பவர்கள் விட்டு கொடுப்பதும் தான் கூட்டணி. ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பது, அனைவரின் எதிர்காலம். கூட்டணியில், இடங்களை பகிர்ந்து கொடுப்பதில் நிறைய சிரமம் உள்ளது. அதனால் தான், மாநில அளவில் பேச்சு நடத்தாமல், மாவட்ட அளவில் பேசி, இடம் ஒதுக்கீடு முடிவு செய்து உள்ளோம்.

அதனால், கூடுதல், குறைவு என்பது பற்றி யோசிக்கக்கூடாது. இடம் ஒதுக்கீடு செய்ததில், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிக்கும் வருத்தமும், மகிழ்ச்சியும் உள்ளது. நாம் போட்டியிடும் இடத்தில் வெற்றி பெற வேண்டும். தோழமை கட்சிகளின் வெற்றிக்கும் உழைக்க வேண்டும். தோழமை கட்சிகளை குறைசொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது. மற்றொரு வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

பேச்சைக் கேட்ட தொண்டர்கள், 'விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுத்தே பாழாய் போனோம். கூட்டணி கட்சிகள் விட்டுக் கொடுப்பதே இல்லை. வருத்தமும், குறையும் நமக்கு மட்டும் தான் இருக்கிறது' என, தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-அக்-202116:00:55 IST Report Abuse
Bhaskaran Uthavithogai viratinaalum kaalaipidithuthukenjum katchikaangiress enbathu anaivarukum theriyum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X