பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி கரையேறுவாரா : இன்று ஓட்டுப்பதிவு

Updated : செப் 30, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா : எம்.எல்.ஏ.,வாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும், பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. வன்முறை ஏற்படாமல் தடுக்க, தொகுதி முழுதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்., 3ல் வெளியாகும் தேர்தல் முடிவு, மம்தாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த
பவானிபூர் தொகுதி, மம்தா, இன்று ஓட்டுப்பதிவு

கோல்கட்டா : எம்.எல்.ஏ.,வாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும், பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. வன்முறை ஏற்படாமல் தடுக்க, தொகுதி முழுதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்., 3ல் வெளியாகும் தேர்தல் முடிவு, மம்தாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 213 தொகுதிகளில் அபாரமாக வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது திரிணமுல்
காங்கிரஸ். திரிணமுலுக்கு பலத்த போட்டி கொடுத்த பா.ஜ., 77 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை திரிணமுல் காங்கிரஸ் தக்க வைத்த போதும், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.


கட்டாயம்



எனினும், மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். இதனால், அவர் ஆறு மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, பவானிபூர் தொகுதி திரிணமுல் எம்.எல்.ஏ., சோபன்தேப், தன் பதவியை ராஜினாமா செய்தார். காலியான அந்த தொகுதிக்கு செப்., 30ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் போட்டியிட, முதல்வர் மம்தா கடந்த சில நாட்களுக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளராக பிரியங்கா திப்ரேவால் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துவிட்டது.


பா.ஜ., விருப்பம்



நந்திகிராம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்துஉள்ளார். எனினும், பவானிபூர் தொகுதி முடிவு தான், அவரது அரசியல் வாழ்வை முடிவு செய்யும்.இதனால் தான், கடந்த சில நாட்களாக மம்தா, பவானிபூர் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 'முதல்வராக நீடிக்க, தனக்கு ஓட்டு போட வேண்டும்' என, மக்களிடம் நேரடியாக கேட்டார். ஆனால், மம்தாவுக்கு நந்திகிராம் தொகுதியில் ஏற்பட்ட தோல்வி, பவானிபூரிலும் தொடர வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது.

இதனால், மம்தாவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், பா.ஜ.,வும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டது. இந்நிலையில், பவானிபூர் தொகுதியில் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. பதற்றத்தை தவிர்க்க, பவானிபூர் தொகுதி முழுதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை, 3ம் தேதி நடக்கிறது; அன்று மதியத்துக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




நாடே எதிர்பார்ப்பு



இதற்கிடையே, 2024ல் லோக்சபாவுக்கு நடக்க உள்ள தேர்தலில், மம்தா தலைமையில், பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான அணி அமைக்கும் முயற்சியில் சில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெறுவது, 3ம் தேதி வெளியாகும் முடிவை பொறுத்து தான் உள்ளது.
அதனால், பவானிபூர் தொகுதியின் முடிவை, மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


திரிணமுலில் இணைந்தகோவா 'மாஜி' முதல்வர்



கோவா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த லுாயிசினோ பெலேரோ, நேற்று திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். கோவா மாநில காங்., முதல்வராக, 1999ம் ஆண்டில் இருந்தவர் லுாயிசினோ பெலேரோ. காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த அவர், சில நாட்களுக்கு முன் மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசினார்; பின், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் மம்தாவை நேற்று சந்தித்த பெலேரோ, அவரது முன்னிலையில் திரிணமுல் காங்.,கில் இணைந்தார். மேலும், கோவா காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஒன்பது பேர், அக்கட்சியில் இணைந்தனர்.கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பெலேரோ உட்பட மூத்த தலைவர்கள் 10 பேர் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்துள்ளது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


ஊட்டிய கையை கடிப்பவர்



காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் நோக்கத்துக்கு உதவியாகவே மம்தா செயல்பட்டு வருகிறார்; அவரை நம்பக் கூடாது. உணவு ஊட்டிய கையை கடிப்பவர் மம்தா. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பதே அவரது நோக்கம். அவரது தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கக் கூடாது; அமைக்க முடியாது!ஆதிர் ரஞ்சன் சவுத்ரிமூத்த தலைவர், காங்.,

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
30-செப்-202109:38:57 IST Report Abuse
sankar மம்தா - மோசமாக தோற்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-202109:01:10 IST Report Abuse
Ramaraj P 77 ல் இருந்து 78 ஆக வளர வேண்டும்.
Rate this:
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
30-செப்-202106:55:02 IST Report Abuse
Ambika. K கரை ஏறக்கூடது. பார்ப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X