சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி நிச்சயம்!

Added : செப் 29, 2021
Share
Advertisement
கோழி வளர்ப்பு தொழில் செய்து வரும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல்: ௧௦ம் வகுப்பு தோல்வி அடைந்த நான், நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்று, டிரைவராக பணிபுரிந்ததுடன், கோழி வளர்ப்பு தொழிலும் செய்தேன். கோழி வளர்க்கிறவனுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டாங்க எனக் கூறவே, அத்தொழிலை விட்டேன்.திருமணமானதும் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்ததுடன், சில
சொல்கிறார்கள்

கோழி வளர்ப்பு தொழில் செய்து வரும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல்: ௧௦ம் வகுப்பு தோல்வி அடைந்த நான், நான்கு சக்கர வாகனம் ஓட்ட கற்று, டிரைவராக பணிபுரிந்ததுடன், கோழி வளர்ப்பு தொழிலும் செய்தேன். கோழி வளர்க்கிறவனுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டாங்க எனக் கூறவே, அத்தொழிலை விட்டேன்.திருமணமானதும் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்ததுடன், சில ஆண்டுகளுக்கு முன் செய்த கோழி வளர்ப்பு தொழிலில் மீண்டும் இறங்கினேன்.

13 ஆயிரம் ரூபாய்க்கு 200 கோழிக் குஞ்சுகளை வாங்கி ஆறு மாதம் வளர்த்து, கறிக்கோழியாக விற்றேன்.அந்த வருமானத்தை வைத்து, 'ஒரிஜினல்' பெருவிடை நாட்டு தாய்க்கோழிகளை வாங்கி வளர்த்தேன். 'இன்குபேட்டர்' முறையில் கோழி முட்டைகளைப் பொரிக்க வைத்ததில், குறைந்த அளவிலேயே குஞ்சுகள் பொரித்தன. மனம் தளராமல் கால்நடை மருத்துவர் மற்றும் கோழிப்பண்ணை வைத்திருப்போரிடம் ஆலோசனை கேட்டு தெரிந்து கொண்டேன். இப்போது 95 சதவீத கோழிக் குஞ்சுகளை காப்பாற்றும் அளவுக்கு தேறிவிட்டேன்.சமூக வலைதளங்களில் கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்ததில், நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். கோழிகள் இயற்கையாக முட்டையிடுவதற்கான மறைவு அமைப்பு, வலைகள் எல்லாம் அமைத்து, பண்ணையை விரிவுபடுத்தினேன்.தற்போது, ஒரு நாள் கோழிக்குஞ்சு 75 ரூபாய்க்கும், ஒரு மாதக் குஞ்சு 160 ரூபாய்க்கும் விற்கிறேன். கறிக்காக உரித்த கோழி கிலோ 550 ரூபாய்க்கும், உயிர்க்கோழி 450 ரூபாய்க்கும் விற்கிறேன். வெளி ஆட்களுக்கு 10 ரூபாய்க்கு முட்டையைக் குஞ்சு பொரித்துத் தரவும் செய்கிறேன். இதனாலும் நல்ல வருமானம் கிடைக்கிறது.அதேபோல், 2,500 முட்டைகள் பொரிக்கும் இன்குபேட்டரை நானே செய்து 35 ஆயிரம் ரூபாய்க்கும், கோழிக்கு தேவையான தீவனத்தை கிலோ 28 ரூபாய்க்கும் விற்கிறேன்.

இப்போது எங்கள் பண்ணையில் 200 தாய்க்கோழிகள், 30 சேவல்கள் உள்ளன.கோழி வளர்ப்பில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும், கொத்துக் கொத்தாக செத்துப் போய்விடும். கோழிக்குஞ்சு மற்றும் கறிக்கோழி விற்பனையால் 42 ஆயிரம் ரூபாயும், தீவன விற்பனையால் 5,000 ரூபாயும், இன்குபேட்டர் விற்பனை மற்றும் கோழி முட்டை குஞ்சு பொரிப்பு வகையில் 10 ஆயிரம் ரூபாய் என, மாதம் 57 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.எந்த தொழில் செய்தாலும் உடனே லாபம் கிடைக்க வேண்டும் என நினைப்பது தவறு. இதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகும். விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X