எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஆகாஷ்வாணியும், துார்தர்ஷனும் மூடலா?

Updated : செப் 30, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
தமிழகத்தில் உள்ள ஒரு சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் உட்பட, 1,000 தரைவழி ஒலி, ஒளிபரப்பு நிலையங்களின் செயல்பாடுகளை, அக்., 31 முதல் நிறுத்த, பிரசார் பாரதி நிறுவனம் எடுத்துள்ள முடிவு, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏன் இந்த முடிவு? இதன் பாதிப்புகள் என்னென்ன என்பதை பற்றி, ஆகாஷ்வாணி மற்றும் துார்தர்ஷன் இன்ஜினியரிங் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர்
ஆகாஷ்வாணி,, துார்தர்ஷனும் மூடலா?

தமிழகத்தில் உள்ள ஒரு சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் உட்பட, 1,000 தரைவழி ஒலி, ஒளிபரப்பு நிலையங்களின் செயல்பாடுகளை, அக்., 31 முதல் நிறுத்த, பிரசார் பாரதி நிறுவனம் எடுத்துள்ள முடிவு, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


ஏன் இந்த முடிவு?இதன் பாதிப்புகள் என்னென்ன என்பதை பற்றி, ஆகாஷ்வாணி மற்றும் துார்தர்ஷன் இன்ஜினியரிங் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் சந்திரசேகர் ஷெட்டி கூறியதாவது:வானொலியும், 'டிவி'யும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள். பேரிடர் காலங்களிலும், தொலைதுாரப் பகுதிகளிலும் அரசின் பணிகளைச் கொண்டு சேர்ப்பது ஆகாஷ்வாணியும், துார்தர்ஷனும் தான். இந்நிலையில், பிரசார் பாரதியின் தலைமையின் கீழ், 1997 முதல் இவ்விரு அமைப்புகளும் வந்து விட்டன. அவற்றின் பார்வையே வேறாக இருக்கின்றன.'இனிமேல், 'அனலாக்' முறையில் ஒலி, ஒளிபரப்புகளைச் செய்ய வேண்டாம். அது, காலாவதி ஆகி விட்டது' என்றனர்.

'டிஜிட்டல்' முறையில் ஒலி, ஒளிபரப்பைச் செய்ய சொன்னதோடு, 2015ல் நாடெங்கும் 630 'டிஜிட்டல் டிரான்ஸ்மீட்டர்'கள் அமைப்பதாக கூறினர். ஆனால், இன்றைய தேதி வரை வெறும் 19 டிஜிட்டல் டிரான்ஸ்மீட்டர்களே பொருத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், எல்லாரும் இணையவழியாகவும், டி.டி.எச்., வழியாகவும் ஒலி, ஒளிபரப்புகளைப் பெறத் துவங்கி விட்டனர் என்ற தவறான புரிதலோடு, ஆகாஷ்வாணி மற்றும் துார்தர்ஷனின் தரைவழி ஒலி, ஒளிபரப்பு நிலையங்களை மூடி விட, பிரசார் பாரதி உத்தரவு போட்டுள்ளது.


480 நிலையங்கள்ஏற்கனவே 480 நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது அக்., 31 முதல், வரும் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மேலும் 415 நிலையங்களை மூட, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் தர்மபுரி, கொடைக்கானல், கும்பகோணம், திருநெல்வேலி, ராமேஸ்வரம், புதுச்சேரி தரைவழி ஒலி, ஒளிபரப்பு நிலையங்களும் அடங்கும். இதேபோல், ஆகாஷ்வாணி ஒலிபரப்பில் 113 'மீடியம் வேவ், ஷார்ட் வேவ்' நிலையங்கள் இருந்தன. அவற்றில் ஏற்கனவே 48 நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் 33 நிலையங்களை மூடச் சொல்லியிருக்கிறது பிரசார் பாரதி.அனலாக் ஒலி, ஒளிபரப்பு வேண்டாம்; காலாவதி ஆகிவிட்டது என்றால், குறைந்தபட்சம் பண்பலை வானொலிகளையாவது ஆரம்பியுங்கள். அதன்மூலம், பொதுமக்களிடம் செய்திகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்பது தான் எங்கள் கோரிக்கை.இதில், இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில், நிகழ்ச்சித் தயாரிப்புகள் நிறுத்தப்படப் போவதாகவும், சென்னை வானொலி நிகழ்ச்சிகளை எடுத்து ஒலிபரப்ப சொல்லப் போவதாகவும் செய்திகள் வருகின்றன.


ஆதரவுஎங்கள் கேள்வி எளிமையானது. இத்தனை நிலையங்களையும் மூடிவிட்டால், அவசர காலத்திலும், ஆபத்து காலத்திலும், எப்படி மக்களிடம் செய்திகளையும், தகவல்களையும் சேர்ப்பீர்கள் என்பது தான். ஆபத்து காலத்தில் இணையமோ, செயற்கைக்கோளோ உதவாது. தரைவழி ஒலி, ஒளிபரப்பு தான் உதவும் என்பது, சென்னை வெள்ளம் ஏற்பட்டது போது கூட நிரூபணமானது. இத்தனை நிலையங்கள் மூடப்பட்டால், அங்கே பணியாற்றும் பொறியாளர்களுக்கு எங்கே மாற்றுப் பணியிடம் தருவீர்கள்? மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இதை வலியுறுத்துவதற்காக, நான் மத்திய அமைச்சர்களிடமும், எம்.பி.,க்களிடமும் எங்கள் கோரிக்கையை முன்வைத்து ஆதரவு திரட்டி வருகிறேன். நானே 19 அமைச்சர்களைச் சந்தித்து ஆதரவு கடிதம் பெற்றுள்ளேன். மத்திய அரசு மனம் இறங்க வேண்டும்.இவ்வாறு சந்திரசேகர் ஷெட்டி கூறினார்.


அன்புமணி எதிர்ப்பு!'மதுரை, கோவை உட்பட ஐந்து வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை வானொலி நிலையத்திற்கு அடுத்ததாக, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய வானொலி நிலையங்கள் அதிக நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பு செய்கின்றன. நான்கு வானொலி நிலையங்கள் மற்றும் புதுச்சேரி வானொலி நிலையத்தையும் தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்ற, பிரசார் பாரதி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரித்து ஒலிபரப்பி வந்த நிலையங்கள், இனி சென்னை வானொலி நிலையம் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளை மட்டும் தொடர் ஒலிபரப்பு செய்ய வேண்டும்.

இந்த நடைமுறை, நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த முடிவு என்பது, மண்டல வானொலி நிலையங்கள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, ஐந்து வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை, பிரசார் பாரதி கைவிட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.- நமது நிருபர் --Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
06-அக்-202123:46:53 IST Report Abuse
John Miller ஒரு குறிப்பிட்ட சாதியினரின் முன்னேற்றத்திற்கே இவை பயன்பட்டன. இழுத்து மூடுவதில் நஷ்டம் பிறருக்கு இல்லை.
Rate this:
Cancel
navasathishkumar - MADURAI,இந்தியா
30-செப்-202112:08:38 IST Report Abuse
navasathishkumar நாட்டின் முக்கிய மீடியா ..இது மூடப்பட வில்லை ...யாருமே இல்லாத கடைக்கு டி ஆற்றி அதில் குளிர் காயிந்தவர்களுக்கே இது பேரிடி ..காரணம் டிஜிட்டல் ..இன்னைக்கு ரேடியோ யார் வீட்டில் இருக்கின்றது ..ஆன்டெனா எங்கொ இருக்கின்றது இதற்காக தனி பிரிவு, அலுவலர்கள் , அன்றாட பணியாளர்கள் தேவையா/ இவர்களுக்கு டூட்டி போட்டு சம்பளம் தருவதை விட சும்மா இருப்பது அரசுக்கு லாபம் . போட்டி போட்டால் தானே பிறரை மிஞ்ச முடியும் ..ஆனால் இங்கேய நானே பணிபுரிந்திருக்கின்றேன் ..நமக்கு ஏன்ப்பா வம்பு என்ரே ஒடுங்கி இருந்து கிரியேட்டிவிட்டி யை காட்ட விடவே மாட்டார்கள் ..இங்கே பணிபுரியும் அத்தனை அறிவிப்பாளர்களும் ஆடிஷனில் பாஸானால் வந்த திறமை சாலிகள் ஆனால் கடந்த முப்பது வருடங்களாக நிரந்தரம் செய்யப்படவில்லை ...போராடியும் பலன் இல்லை ,,அடுத்து வானொலியின் அதிகாரிகளில் பலர் தற்போது தமிழ் நாட்டை பொறுத்தவரை ஐம்பது வயதை கடந்தவர்கள் இவர்கள் நிலைய அதிகாரிகளாக பதவி உயர்வும் தந்து பொறுப்பையும் தரவில்லை அதன் விளைவு நமக்கு என்ன என்று வீ ஆர் எஸ் வந்தால் கூட பி எஸ் என் எல் போல நல்ல தொகை வாங்கிட்டு விட்டு விட்டு போக கூட வாய்ப்பும் உள்ளது ..தூர் தர்சனும் , அகில இந்திய வானொலியும் டிஜிட்டல் ,ஆப்பில் ஒளி பரப்ப பாதிப்பு யாருக்கும் இல்லை .. ஆனால் அன்றாடம் ஆறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கேசுவல் அறிவிப்பாளர்களே அதிகம் பாதிப்படைவார்கள் .. ஆனால் இந்த அறிவிப்பாளர்களை உடன் கன்பார்ம் செய்து எப் எம்மில் இன்னைக்க வேண்டும் ..அறிவிப்பு கலையை சொல்லி கொடுத்த அகில இந்திய வானொலி இவர்களை ஏற்கனவே ரீ ஆடிசன் என்று பயம் காட்டி மூத்த அறிவிப்பாளர்களை டெலிட் செய்ய நல்ல தொகுப்பாளர்கள் இங்கே இல்லை ..ரேடியோ அறிவிப்பு என்பது ஆர்ட் .. ஆனால் தற்போது எப் எம்மில் வயது வரம்பை காட்டி ரேடியோவே தெரியாத புதியவர்கள் தனியார் பண்பலையை காப்பி அடித்து பேச அகில இந்திய வானொலியின் மதிப்பும் குறைந்து விட்டது . குரலுக்கும் , திறமைக்கும் ,டெடிகேஷனுக்கும் குறைவில்லாத ஊழியர்களை அரசு கவனிக்க வேண்டும் ..மீண்டும் சொல்வேன் ..செய்தி ,பாடல்கள் , நாடகம் இவற்றை தனியார் பண்பலைகள் தராது ...அரசு செய்யும் ஆகவே நிலையத்தை நம்பி இருக்கும் நாடக கலைஞர்கள் , மெல்லிசை பாடகர்கள் , உள்ளூர் தொழில் முனைவோர்கள் அனைவரையும் கைவிட்டு விட வேண்டாம் அரசே .
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
30-செப்-202111:48:08 IST Report Abuse
தத்வமசி சேலம் முதல் சென்னை வரை மத்திய அரசு அமைப்பதாக சொன்ன பசுமை வழி சாலை தேவையில்லை என்று போராட தெரிந்தது, ஆனால் சாலை வசதி வேண்டும். கெயில் நிறுவனம் குழாய்களை பாதிக்கக் கூடாது என்று போராட தெரிகிறது, ஆனால் சமையல் எரிவாயு வீட்டுக்கு வீடு முட்டு சந்துக்கு முட்டு சந்து வேண்டும். பெட்ரோலியம், மீத்தேன் எரி வாயு தமிழகத்தில் எடுக்கக் கூடாது என்று தெரியும், ஆனால் வாகனங்கள் பெருகிக் கொண்டே இருக்கிறது. மின்சாரம் தயாரிக்க அணுஉலைகள் வேண்டாம் போராடத் தெரியும், ஆனால் மின்சாரம் வேண்டும். குளச்சல் போன்ற இடங்களில் துறைமுகம் வேண்டாம் என்று போராட தெரியும், ஆனால் வேலைவாய்ப்பு வசதி வேண்டும் என்று பிறகு பாதிரிகளுடன் சேர்ந்து போராட வேண்டியது. தூத்துக்குடி ஆலை வேண்டாம், போராடத் தெரியும், ஆனால் உரத்திற்கு மற்ற பயன்பாட்டிற்கு தாமிரம் வேண்டும். இப்படியே போராட்டம் நடத்தத் தெரிந்த உங்களுக்கு, தூர்தர்சனை மறைத்து பல பல தனியார் தொலைகாட்சி நிறுவங்கள் வருவதை தடுக்க போராட வில்லை, அதற்கு போட்டியாக உங்களை தயார் செய்து கொள்ளவில்லையே ஏன் ? அவர்கள் வளர நீங்கள் தானே காரணம், உங்களின் அலட்சிய போக்கு தானே காரணம். இப்போது தூர்தர்ஷன் மூடுகிறார்கள் என்றால், அதற்கு போட்டியாக ஏன் வேலை செய்யவில்லை ? இடர் காலங்களில் வேறு வழிகளை பார்த்துக் கொள்ளலாம், அதற்காக உங்களுக்கு வெட்டிச் சம்பளம் தேவையில்லை. மூடுவதே நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X