பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்ற பிராணிகளை நேசத்துடன் பராமரிப்போம்!:ஐகோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை:''தெருக்களில் ஆதரவற்ற நிலையில் உள்ள செல்லப் பிராணிகளை, நேசத்துடன் பராமரிக்க வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார். உலக வெறிநாய் தினத்தையொட்டி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், 'நாய்களால் பரவும் வெறிநோயை தடுக்க முற்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள்' என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கம் நடந்தது.
 ஆதரவற்ற பிராணிகளை நேசத்துடன் பராமரிப்போம்!:ஐகோர்ட் தலைமை நீதிபதி வேண்டுகோள்

சென்னை:''தெருக்களில் ஆதரவற்ற நிலையில் உள்ள செல்லப் பிராணிகளை, நேசத்துடன் பராமரிக்க வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார்.

உலக வெறிநாய் தினத்தையொட்டி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில், 'நாய்களால் பரவும் வெறிநோயை தடுக்க முற்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள்' என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசியதாவது:

தெருக்களில் ஆதரவற்ற நிலையில், நாய்கள் உள்ளிட்ட அனைத்து பிராணிகளுக்கும் உணவு அளித்து, அடைக்கலம் கொடுத்து பராமரிக்க வேண்டும். விலங்குகளிலேயே நாய் மிகவும் நன்றி உணர்வு உள்ளது; மனிதர்களிடம் அன்பு காட்டக்கூடியது.


பராமரிக்க வேண்டும்

எங்கள் வீட்டில் குழந்தை போல நாங்கள் வளர்த்த செல்ல நாய், 13 வயதில் இறந்தது. செல்லப் பிராணி இறந்தபின், வளர்ப்பதற்கு நாய்களை நிறைய பேர் கொடுத்தனர்; அவற்றை வளர்க்க வில்லை. ஆனால், தெருவோர நாய்களை பராமரித்து வருகிறோம். எனவே, ஆதரவற்ற நிலையில் உள்ள தெருவோர நாய்களை பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வீட்டின் செல்லப்பிராணி குறித்து பேசியபோது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கண் கலங்கினார்.


விழிப்புணர்வு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் பேசியதாவது:நாய் தானே கடித்து விட்டது என அலட்சியமாக விடுவதால், இறப்பு வரை செல்கிறது. நாய் கடிக்கு சுண்ணாம்பு வைத்தால் போதும் என சிலர் நினைக்கின்றனர். அது தவறு. உடனடியாக மருத்துவரிடம் உரிய சிகிச்சை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை, டாக்டர் ராணி கவுர் பானர்ஜி துவக்கி வைத்தார். வெறிநோய்க்கான 'ரேபிஸ் வெறிநோய் - கட்டுக் கதைகளும் உண்மைகளும்' என்ற விழிப்புணர்வு கையேட்டையும், செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு அவர் வழங்கினார்.இந்த முகாமில், 250 நாய், பூனைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X