அணி மாறுகிறார் செல்லுார் ராஜு?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணி மாறுகிறார் செல்லுார் ராஜு?

Added : செப் 29, 2021
Share
மதுரை:''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., போலவே முதல்வர் ஸ்டாலின் ரவுடிகளை அடக்கி, ஒடுக்க நடவடிக்கை எடுக்கிறார்,'' என, கூட்டுறவு துறையின் முன்னாள் அமைச்சர் ராஜு தெரிவித்தார். ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பல முறை அவரைப் புகழ்ந்த ராஜு, நேற்றும் 'தன் எண்ணக் கிடக்கை' மறைமுகமாக வெளியிட்டார்.மதுரையில் அவர் கூறியதாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களில் நடத்த,

மதுரை:''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., போலவே முதல்வர் ஸ்டாலின் ரவுடிகளை அடக்கி, ஒடுக்க நடவடிக்கை எடுக்கிறார்,'' என, கூட்டுறவு துறையின் முன்னாள் அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பல முறை அவரைப் புகழ்ந்த ராஜு, நேற்றும் 'தன் எண்ணக் கிடக்கை' மறைமுகமாக வெளியிட்டார்.மதுரையில் அவர் கூறியதாவது:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நான்கு மாதங்களில் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் மேடு, பள்ளமாக உள்ள சாலைகள், தெருக்களை விரைவில் சீரமைத்து, பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீரில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் கொடுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டனர். அதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. எனவே, அந்த பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சியின் போது ரவுடிகளை அடக்கி, ஒடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தார். அதேபோல, இந்நாள் முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அவர் தி.மு.க.,வில் ஐக்கியம் ஆக நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X