பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்; உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (4+ 2)
Share
Advertisement
புதுடில்லி ;'பட்டாசு தயாரிப்பில், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, 'பேரியம்' என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு மிகக் கடுமையான விதிமீறல் நடைபெற்றுள்ளது' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு
பட்டாசு உற்பத்தியில் விதிமீறல்; உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடில்லி ;'பட்டாசு தயாரிப்பில், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, 'பேரியம்' என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு மிகக் கடுமையான விதிமீறல் நடைபெற்றுள்ளது' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங் கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு தொழிற்சாலைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய ஆய்வின் முதற்கட்ட அறிக்கை குறித்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:


latest tamil newsவழக்கு பதிவு

பெரும்பாலான பட்டாசுகளில் தடைசெய்யப்பட்ட பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது சி.பி.ஐ., ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ரசாயனத்தை தடை செய்து, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி பேரியத்தை பயன்படுத்திய உற்பத்தியாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்ய கூடாது?
விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள பட்டாசு பெட்டிகளில், தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் குறித்த விபரங்கள் இல்லை என்பதும் சி.பி.ஐ., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மீண்டும் விசாரணை

இந்த விவகாரத்தில் இன்னும் ஆறு வார காலத்தில் முழுமையான அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். முதல்கட்ட ஆய்வறிக்கையின் நகல், பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இந்த வழக்கு அடுத்த மாதம் 6ம் தேதி
மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (4+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
30-செப்-202109:16:03 IST Report Abuse
Ram எல்லா தொழிற்ச்சாலைகளையும் மூடி மக்களை பிச்சையெடுக்க விட்டுவிடுங்கள் .... கார் லார்ரி பஸ் போன்றவைகள் வெளியிடும் நச்சுவைவிட ஒரு நாள் தீபாவளியால் ஏற்படுவது குறைவே ... இது நீதிபதிக்கு தெரியலையா
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-செப்-202107:56:19 IST Report Abuse
Lion Drsekar வருடத்தில் ஒருநாள் வெடிக்கும் இந்த இரசாயனத்துக்கே இப்படி என்றால் தினம் தினம் இரசாயணத்தையே உணவாக உட்க்கொள்ளும் மக்களின் நிலை? இதில் இரசாயனம் இல்லை, ஆதாரம் இருந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் நிலையில் ஆதாரத்துடன் செயல்பட்ட நீதியும் பெற்ற ட்ராபிக் ராமசாமி ஐயா அவர்களின் நிலை, மற்றும் நீதியின் நிலைப்பாடு ? மீண்டும் அதே நடைபாதைக்கடைகள், அதே பேனர்கள் ..?? இத்தனை ஆண்டுகள் பயன்படுத்திய என் இப்போது பயன்படுத்தும் குறைந்த விலையில் விற்கப்படும் சமையல் எண்ணையின் தரம் ? அது இதில் தயாரிக்கப்படுகிறது ?? விற்கப்படும் காய் கனிகள் பூக்கும் தருவாய் முதல் விற்கப்படும் நிலைவரை ..? தவறு செய்பவர்கள் திருந்தினால் மட்டுமே இவ்வையகம் பிழைக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
30-செப்-202107:07:09 IST Report Abuse
S.Baliah Seer தீபாவளிக்கும், ராவணனுக்கும் சம்பந்தம் இல்லையெனினும் மக்களிடம் தவறான கருத்துக்கள் பரவி இருப்பதை சுட்டிக்காட்டவே ராவணன் பற்றி எழுதினேன். நரகாசூரன் கூட ஓர் ஆரிய அரக்கனே. அவனைக்கொன்ற விஷ்ணு ஓர் சத்திரியர். ஏன் தற்போது சவ ஊர்வலங்களில் பட்டாசு, வாணவேடிக்கை, டப்பாங்குத்து டான்ஸ் நடக்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X