உயிர் பலி வாங்கும் சாலை; கண்டுகொள்ளாததால் கிலி| Dinamalar

உயிர் பலி வாங்கும் சாலை; கண்டுகொள்ளாததால் 'கிலி'

Added : செப் 29, 2021
Share
அன்னுார் : குழாய் பதித்த பின் சரி செய்யப்படாத சாலையில் விபத்துக்குள்ளாகி இளைஞர் பரிதாபமாக இறந்தார்.அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், குருக்கிளையம்பாளையம் உள்ளது. இங்கு சாலையின் வடக்கு புறம், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்துக்காக பெரிய குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது; தார் ஊற்றி சாலை அமைக்கவில்லை.தெற்கு புறம் அத்திக்கடவு

அன்னுார் : குழாய் பதித்த பின் சரி செய்யப்படாத சாலையில் விபத்துக்குள்ளாகி இளைஞர் பரிதாபமாக இறந்தார்.

அன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், குருக்கிளையம்பாளையம் உள்ளது. இங்கு சாலையின் வடக்கு புறம், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்துக்காக பெரிய குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு மூடப்பட்டது; தார் ஊற்றி சாலை அமைக்கவில்லை.தெற்கு புறம் அத்திக்கடவு திட்டத்துக்காக குழாய் தோண்டப்பட்டுள்ளது; அங்கும் தார் சாலை அமைக்கவில்லை. சாலையின் இருபுறமும் ஜல்லிக் கற்களும் மண்ணும் ஆக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன், இவ்வழியே இருசக்கர வாகனத்தில் இரவில் வந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் குழியில் சிக்கி விபத்துக்குள்ளாகி பலியானார்.பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக தினம் ஒரு விபத்து நடக்கிறது. இதுவரை ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். பலமுறை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் சாலை அமைப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர்.

ஒரு பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓட்டியுள்ள சாலையை விட தாழ்வாக உள்ளது. அதில் ஏறி இறங்கும் இருசக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. விரைவில் சாலையை ஒரே சமமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சாலை மறியலுக்கு திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதேபோல், சிறுமுகை சாலையிலும், கவுண்டம்பாளையத்தில் சாலை சரி செய்யப்படாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.

கவுண்டம்பாளையம் மக்கள் கூறுகையில், 'சாலை பணி நடக்கும் இடத்தில் ரிப்ளக்டர், வேகத்தடை எதுவும் வைக்கவில்லை. இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X