பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் முன்னேற்றம்; விழிப்புணர்வு முகாம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தில், மகளிர் முன்னேற்றம் குறித்த, மத்திய அரசின் விழிப்புணர்வு முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் இணைந்து, பல்வேறு சமுதாய பணிகள் மேற்கொண்டு வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதை

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையத்தில், மகளிர் முன்னேற்றம் குறித்த, மத்திய அரசின் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் இணைந்து, பல்வேறு சமுதாய பணிகள் மேற்கொண்டு வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள் பயன்பெறும் வகையில், பெண்களுக்கான முன்னேற்ற பயிற்சி, தேசிய மனித மேம்பாட்டு மைய வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்தன.தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரிய கல்வி அதிகாரி பிரபாகரன் துவக்கி வைத்தார்.

தபால் அலுவலர் ஆனந்தன், செல்வமகள் திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம், தொடர் வைப்பு திட்டம், போஸ்டல் வங்கி சேவை உட்பட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். காந்தி கிராம தொழில் வாரிய மேலாளர் (ஓய்வு) ரவிச்சந்திரன், இந்திய தர நிர்ணய நிறுவன விஞ்ஞானி ஹேமலதா, கோவை மாவட்ட முன்னோடி வங்கியின் நிதிசார் கல்வி ஆலோசகர் இளஞ்செழியன் உட்பட பலர் பேசினர்.தபால் துறையை சேர்ந்த தேவராஜ், சுபத்திரா உட்பட பலர் பங்கேற்றனர். தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X