பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி, கூடலுாருக்கு செல்ல காந்திபுரத்தில் இருந்து பஸ்!

Added : செப் 29, 2021
Share
Advertisement
காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நாளை முதல் ஊட்டி, கூடலுாருக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டி, கூடலுார் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பயணிகள் அலைச்சலை தவிர்க்கும் விதமாக, இந்த பஸ்கள் அனைத்தும் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, நாளை முதல் இரவு நேரத்தில்

காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நாளை முதல் ஊட்டி, கூடலுாருக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேட்டுப்பாளையம் ரோடு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டி, கூடலுார் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பயணிகள் அலைச்சலை தவிர்க்கும் விதமாக, இந்த பஸ்கள் அனைத்தும் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, நாளை முதல் இரவு நேரத்தில் இயக்கப்படுகின்றன.எனவே, ஊட்டி, கூடலுாருக்கு இரவு நேரம் செல்லும் பயணிகள், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் செல்வதை தவிர்த்து, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பயணிக்கலாம் என, அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் ரோட்டில் பாலம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதனால் பயணிகளுக்கு ஏற்படும் அலைச்சலை தவிர்க்க, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊட்டி, கூடலுாருக்கு வரும், 1ம் தேதி முதல் இரவு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு, 10:00 முதல் காலை, 5:30 மணி வரை ஊட்டி மண்டலத்துக்கு உட்பட்ட, 9 பஸ்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன' என்றார்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X