பொது செய்தி

தமிழ்நாடு

பணிகளுக்கு வந்ததே ரூ.1.02 கோடி நிதி

Added : செப் 29, 2021
Share
Advertisement
சூலுார் : சூலுார் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, 15வது நிதிக்குழு மானியத்தில், ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கவுன்சிலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சூலுார் ஒன்றிய கவுன்சில் கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு தலைமை வகித்து பேசியதாவது:சூலுார் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, 15வது நிதிக்குழு

சூலுார் : சூலுார் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, 15வது நிதிக்குழு மானியத்தில், ரூ.1.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கவுன்சிலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சூலுார் ஒன்றிய கவுன்சில் கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு தலைமை வகித்து பேசியதாவது:சூலுார் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, ஒரு கோடியே, 2 லட்சத்து, 77 ஆயிரத்து, 689 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட நிதியான, 60 சதவீதத்தில், குடிநீர் வசதிக்கு, 30 சதவீதமும், சுகாதார மேம்பாட்டுக்கு, 30 சதவீதமும் பயன்படுத்த வேண்டும். வரையறுக்கப்படாத நிதியான, 40 சதவீதத்தில், மற்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளலாம். கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஒன்றிய நிர்வாகத்துக்கு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தி.மு.க., கவுன்சிலர் ராஜேந்திரன் பேசுகையில், ''மயிலம்பட்டி ஊராட்சியில் சாலைப் பணி முடிந்த பின்னரும், கரையாம்பாளையம், மயிலம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பி.டி.ஓ., சுப்புலட்சுமி பேசுகையில், ''பவானிசாகரில் நடக்கும் பயிற்சி முகாமில், கவுன்சிலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.

கவுன்சிலர்கள் புகார்ஒரு சில ஊராட்சி தலைவர்கள், தங்கள் பகுதியில் நடக்கும் அரசு விழாக்கள் மற்றும் ஊராட்சி மன்ற கூட்டத்துக்கு கவுன்சிலர்களை அழைப்பதே இல்லை. அதனால், ஒன்றிய கவுன்சிலர் யார் என்று கூட மக்களுக்கு தெரிவதில்லை. அழையா விருந்தாளியாக சென்று நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டியுள்ளது என புகார் தெரிவித்தனர்.மாவட்ட கவுன்சிலர் கோபால்சாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X