பொது செய்தி

இந்தியா

சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் முஸ்லிம் பெண்

Updated : செப் 30, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சூர் : கேரளாவில் சுடுகாட்டு பராமரிப்பாளராக பணியாற்றும் முஸ்லிம் பெண், தினமும் பிணங்களை எரித்து வருகிறார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலகுடாவில் ஹிந்துக்களின் சுடுகாட்டு பராமரிப்பாளராக சுபீனா ரஹ்மான், 28, என்ற முஸ்லிம் பெண் பணியாற்றி வருகிறார். போலீஸ்
சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் முஸ்லிம் பெண்


திருச்சூர் : கேரளாவில் சுடுகாட்டு பராமரிப்பாளராக பணியாற்றும் முஸ்லிம் பெண், தினமும் பிணங்களை எரித்து வருகிறார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள திருச்சூர் மாவட்டம், இரிஞ்ஞாலகுடாவில் ஹிந்துக்களின் சுடுகாட்டு பராமரிப்பாளராக சுபீனா ரஹ்மான், 28, என்ற முஸ்லிம் பெண் பணியாற்றி வருகிறார்.


போலீஸ் அதிகாரிபட்டப்படிப்பை பாதியில் நிறுத்திய ரஹ்மான், இதுவரை நுாற்றுக்கணக்கான உடல்களை எரித்துள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான 250க்கும் அதிகமானோரின் உடல்களை, இரவு, பகல் பாராமல் எரித்துஉள்ளார். சுபீனா ரஹ்மான் கூறியதாவது:நான் சிறு வயதில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன்.
ஆனால், என் குடும்ப சூழ்நிலை, இந்த தொழிலில் என்னை ஈடுபடுத்தியது. இதற்காக நான் சிறிதும் வருத்தப்படவில்லை.கூலித்தொழிலாளியாக பணியாற்றும் என் கணவர், எனக்கு பெரும் உதவியாக உள்ளார். வயதான தாய், தந்தையரையும் நான் தான் காப்பாற்ற வேண்டிஉள்ளது.எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். 'சுடுகாட்டுக்குள் பெண்களை ஹிந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள்' என சிலர் கூறினர். ஆனால், எனக்கு ஹிந்துக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


மத வேறுபாடு கிடையாதுகிறிஸ்துவர்கள் சிலரும் இங்கு உடல்களை எரிக்க வருகின்றனர். எனக்கு மத வேறுபாடு கிடையாது. அதனால், எந்த வித வித்தியாசமும் இன்றி, எனக்கு கிடைத்த இந்த பணியை, மனப்பூர்வமாக செய்கிறேன். இதில் கிடைக்கும் வருமானம், என் குடும்பத்துக்கு பெரிதும் உதவியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
30-செப்-202106:11:46 IST Report Abuse
Ramanujam Veraswamy Though this Muslim lady is Tobe appreciated for taking this assignment as a source of income to support her family, due to poor economic condition, the society is to be blamed to force her to take this assignment, against conventions.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X