பொது செய்தி

தமிழ்நாடு

இதய பாதிப்பு வராமல் தடுக்கலாம்: 'காவேரி' செயல் தலைவர் யோசனை

Added : செப் 29, 2021
Share
Advertisement
சென்னை:''வேலை, வாழ்க்கை சமநிலையின்மை போன்றவற்றால், இளம் வயதினரும் இதய பாதிப்புக்கு ஆளாகின்றனர். அறிகுறிகளை கவனிக்காமல், தாமதமாக சிகிச்சைக்கு செல்வதும் சிக்கலாகிவிடுகிறது. ''ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதால், இதய பாதிப்பு வராமல் தடுக்கலாம்,'' என, காவேரி மருத்துவமனைகள் செயல் தலைவர் அரவிந்தன் செல்வராஜ் பேசினார்.உலக இதய தினத்தை முன்னிட்டு, காவேரி
 இதய பாதிப்பு வராமல் தடுக்கலாம்: 'காவேரி' செயல் தலைவர் யோசனை

சென்னை:''வேலை, வாழ்க்கை சமநிலையின்மை போன்றவற்றால், இளம் வயதினரும் இதய பாதிப்புக்கு ஆளாகின்றனர். அறிகுறிகளை கவனிக்காமல், தாமதமாக சிகிச்சைக்கு செல்வதும் சிக்கலாகிவிடுகிறது. ''ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதால், இதய பாதிப்பு வராமல் தடுக்கலாம்,'' என, காவேரி மருத்துவமனைகள் செயல் தலைவர் அரவிந்தன் செல்வராஜ் பேசினார்.

உலக இதய தினத்தை முன்னிட்டு, காவேரி மருத்துவமனை சார்பில், சென்னை தி.நகரில் உள்ள ஹிந்தி பிரசார சபாவில், இளம் வயதினருக்கான இதய பாதிப்பு அறிகுறிகள் அடையாளம் காணும் இலவச பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமில், காவேரி மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசியதாவது:ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதய நோய்கள் வராமல் நாமே தடுக்க முடியும். ஆனால், துரதிஷ்டவசமாக முன்தடுப்பு செயல்பாடுகள் மீது பலரும் கவனம் செலுத்தாமல் விடுவதும் சிக்கலாகி விடுகிறது.வேலை சுமை, வாழ்க்கை சமநிலையின்மை போன்றவற்றால் இளம் வயதினர் மன அழுத்தம், கலக்கம், மன சோர்வுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.

சில நேரங்களில், இதய பாதிப்பு அறிகுறிகளை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு செல்வதால், குணம் அடைவது கடும் சிரமமாகி விடுகிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் வாயிலாக, இதய பாதிப்புகளை தடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன், காவேரி மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X