பொது செய்தி

இந்தியா

டில்லி அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடம் துவக்கம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, தேசபக்தி பாடம், பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தினமும் 40 நிமிடம்கடந்த மாதம் 15ல் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், 'டில்லி பள்ளிகளில், பிளஸ் 2 வரை, மாணவர்களிடம் தேச பக்தியை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள், பாடங்கள்

புதுடில்லி:டில்லி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, தேசபக்தி பாடம், பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.


தினமும் 40 நிமிடம்

கடந்த மாதம் 15ல் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், 'டில்லி பள்ளிகளில், பிளஸ் 2 வரை, மாணவர்களிடம் தேச பக்தியை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள், பாடங்கள் நடத்தப்படும்' என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், டில்லி அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடம் நேற்று முன்தினம் துவக்கப்பட்டது. இது பற்றி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:முதல் கட்டமாக, ஆறு - எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினமும் 40 நிமிடமும், ஒன்பது - பிளஸ் 2வரை உள்ள மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களும், தேச பக்தி பாடங்கள் நடத்தப்படும். நாற்பது நிமிட வகுப்பு, ஐந்து நிமிட தேச பக்தி தியானத்துடன் துவங்கும். இதில், 'நான் பாரத மாதாவை வழிபட்டு, நாட்டை வணங்குகிறேன்' என, மனதுக்குள் கூறியபடி, மாணவர்கள் தியானம் செய்ய வேண்டும். மேலும், தாங்கள் சிறந்த தேச பக்தர்களாக கருதும் ஐந்து பேர் பற்றி மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் கூறி, அவர்களை பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டும். தொடர்ந்து, நாடு தொடர்பாக பல தலைப்புகளில் மாணவர்கள் பேசவும், எழுதவும் வேண்டும். இவை மதிப்பிடப்பட்டு, அவர்கள் உள்மதிப்பீட்டு எண்ணில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நாட்டின் மீது மதிப்புஇது பற்றி டில்லி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில், ''இளம் வயதிலேயே நாட்டின் மீது மதிப்பும், பக்தியும் ஏற்பட வேண்டும் என்பதே, முதல்வர் கெஜ்ரிவாலின் விருப்பம். அதை நிறைவேற்றும் வகையில், இந்த பாடத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X