சர்வதேச போலீஸ் உதவியுடன் பெண் உளவாளிக்கு வலை

Added : செப் 29, 2021
Share
Advertisement
புவனேஸ்வர்:ஐந்து அதிகாரிகளை மயக்கி, ராணுவ ரகசியங்களை கறந்த பெண் உளவாளியை பிடிக்க, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியை நாட, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலசோரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வுப் பிரிவு இயங்கி வருகிறது. ராக்கெட், ஏவுகணை போன்றவற்றை

புவனேஸ்வர்:ஐந்து அதிகாரிகளை மயக்கி, ராணுவ ரகசியங்களை கறந்த பெண் உளவாளியை பிடிக்க, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் உதவியை நாட, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாலசோரில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வுப் பிரிவு இயங்கி வருகிறது. ராக்கெட், ஏவுகணை போன்றவற்றை பாதுகாப்பாக ஏவுவதற்கான தொழில்நுட்ப வசதிகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

சமீபத்தில், இந்த மையத்தைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள், தொழில்நுட்ப ரகசியங்களை ஒரு பெண்ணுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து ஒடிசா குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் இயக்குனர் சஞ்சீவ் பான்டா கூறியதாவது:உளவு பார்த்த பெண், மொபைல் போனில் 'வீடியோ' வசதி வாயிலாக ஐந்து பேரிடம் தனித் தனியாக பேசியுள்ளார்.

வெவ்வேறு பெயர்களில் ஏழு 'பேஸ்புக்' கணக்குகளை துவக்கி, ஐந்து பேரையும் மயக்கியுள்ளார். அதன்மூலம் ராணுவத்தின் முக்கிய ரகசியங்களை திருடியுள்ளார்.கைதான ஒரு அதிகாரியின் வங்கிக் கணக்கில், துபாயில் இருந்து இரு தவணைகளில் 38 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப் பட்டு உள்ளது.

அது, உளவுப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். உளவுப் பெண்ணைப் பிடிக்க, 'இன்டர்போல்' போலீஸ் உதவியை நாட உள்ளோம். விரைவில் அந்த பெண் கைது செய்யப்படுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X