பண மோசடி வழக்கு எம்.பி.,க்கு 'சம்மன்'

Added : செப் 29, 2021
Share
Advertisement
மும்பை:மஹாராஷ்டிராவில், பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக்கோரி, சிவசேனா எம்.பி., பாவனா கவாலிக்கு அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பிஉள்ளனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி., பாவனா கவாலி, 48, பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. பாவனா மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், பல இடங்களில்
 பண மோசடி வழக்கு எம்.பி.,க்கு 'சம்மன்'

மும்பை:மஹாராஷ்டிராவில், பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக்கோரி, சிவசேனா எம்.பி., பாவனா கவாலிக்கு அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பிஉள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி., பாவனா கவாலி, 48, பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. பாவனா மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், பல இடங்களில் சோதனை நடத்தினர்.

பாவனா உள்ளிட்ட சிலர் ஒரு அறக்கட்டளையை தனியார் நிறுவனமாக மாற்றி, 18 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம், பாவனாவின் கூட்டாளியான சயீது கான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை, அமலாக்கத் துறையினர் நாளை வரை காவலில் எடுத்து உள்ளனர்.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகக்கோரி, பாவனாவுக்கு அமலாக்கத் துறை , 'சம்மன்' அனுப்பியது. தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், வரும் 4ம் தேதி ஆஜராகக்கோரி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X