ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு: மேக்ஸ்வெல் அரைசதம் விளாசல்

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாச, பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு எவின் லீவிஸ், யாஷஸ்வி
IPL 2021, RR VS RCB, Royal Challengers Bangalore

துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாச, பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


latest tamil news


எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ஜார்ஜ் கார்டன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் லீவிஸ். முதல் விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது கிறிஸ்டியன் பந்தில் ஜெய்ஸ்வால் (31) அவுட்டானார். ஹர்ஷல் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய லீவிஸ், 31 பந்தில் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய இவர், 37 பந்தில் 58 ரன் குவித்தார்.


latest tamil news



சகால் 'சுழலில்' மகிபால் லாம்ரர் (3), லிவிங்ஸ்டன் (6) சிக்கினர். ஷபாஸ் அகமது பந்தில் கேப்டன் சஞ்சு சாம்சன் (19), ராகுல் டிவாட்டியா (2) அவுட்டாகினர். ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் ரியான் பராக் (9), கிறிஸ் மோரிஸ் (14), சேட்டன் சக்காரியா (2) வெளியேறினர்.ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. கார்த்திக் தியாகி (1) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார்.


latest tamil news


சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது முஷ்தபிஜுர் ரஹ்மான் பந்தில் படிக்கல் (22) போல்டானார். கோஹ்லி (25) 'ரன்-அவுட்' ஆனார். பின் இணைந்த ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ரன் சேர்த்த போது முஷ்தபிஜுர் பந்தில் பரத் (44) அவுட்டானார்.

மோரிஸ் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். ரியான் பராக் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிவிலியர்ஸ் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் (50), டிவிலியர்ஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் முஷ்தபிஜுர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202111:28:07 IST Report Abuse
அப்சாமி மேக்ஸ்வெல் போன்றவர்கள் ஆத்மநிர்பரா வீரர்கள். இங்கே வந்து இந்தியாவுக்கு உழைக்கிறார்கள். ஜெய் ஹிந்த்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X