பொது செய்தி

தமிழ்நாடு

தடுத்துநிறுத்துங்க வீடுகள் தோறும் மின் மோட்டாரில் குடிநீர் திருட்டு அலுவலர்கள், புரோக்கர்கள் துணையுடன் அமோகம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் விடுகளின் இணைப்புகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி அலுவலர்கள், புரோக்கர்கள் துணையுடன் அமோகமாக நடப்பதால் இதை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் 7 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்கள் உள்ளன. இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் விடுகளின் இணைப்புகளில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருட்டு அதிகரித்து வருகிறது.

உள்ளாட்சி அலுவலர்கள், புரோக்கர்கள் துணையுடன் அமோகமாக நடப்பதால் இதை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் 7 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்கள் உள்ளன. இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் இணைப்புகள் மேடான பகுதிகளில் கொடுக்கப்பட்டிருப்பதால் குடிநீர் செல்வதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் வீடுகளில் இணைப்பு பெற்ற பலர் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுகின்றனர். இதனால் அனைவருக்கும் சீரான குடிநீர் விநியோகம் ஆவதில்லை. குறிப்பாக நகர்பகுதிகளில் மோட்டார் மூலம் குடிநீர் திருடுவது அதிகரித்து வருகிறது.

தற்போது கிராமப்பகுதிகளிலும் இந்த கலாசாரம் பெருகி வருகிறது. மாவட்டத்தில் குடிநீர் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் இருந்தாலும் தற்போது கூட்டுக்குடிநீர் திட்டங்கள், உள்ளூர் நீராதாரங்கள் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு குடிநீர் கிடைப்பதை இது போன்ற மின்மோட்டார் குடிநீர் திருட்டு கேள்விக்குள்ளாக்குகிறது. மோட்டார் வைத்து குடிநீர் திருடுவதை தடுக்க, விநியோக நேரங்களில் உள்ளாட்சி அலுவலர்கள்,புரோக்கர்களுக்கு தெரியால் குடியிருப்புகளில் நேர்மையான அலுவலர்கள் மூலம் ரகசியமாக சோதனையிட வேண்டும்.

அப்போதுதான் இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.நடவடிக்கை எடுங்கஅனைத்து நகராட்சி பகுதிகளிலும் குடிநீர் திருட்டு பரவலாக நடந்து வருகிறது. கிராமப்பகுதிகளிலும் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை தருகிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழைகள் தான். உள்ளாட்சி அமைப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கார்த்திக், தனியார் ஊழியர், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X