பொது செய்தி

இந்தியா

பயங்கரவாத தடுப்பு படை சேர்க்கை வயதில் தளர்வு

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுடில்லி:பயங்கரவாதிகளுக்கு எதிரான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'கோப்ரா' பிரிவிற்கான சேர்க்கை வயதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், நக்சல்களுக்கு எதிராக 'கோப்ரா' சிறப்பு படை செயல்படுகிறது.இதற்கான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சேர்க்கை தனிப்பட்ட முறையில்

புதுடில்லி:பயங்கரவாதிகளுக்கு எதிரான மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 'கோப்ரா' பிரிவிற்கான சேர்க்கை வயதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையான சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், நக்சல்களுக்கு எதிராக 'கோப்ரா' சிறப்பு படை செயல்படுகிறது.இதற்கான வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சேர்க்கை தனிப்பட்ட முறையில் நடக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் வயது வரம்பால் இப்பிரிவில் சேருவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதை ஈடுசெய்து, அதிக எண்ணிக்கையில் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சேர்க்க வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:கோப்ரா சிறப்பு படையில் உதவி கமாண்டன்ட் அதிகாரியாக சேர, 2019க்கு முன் 30 ஆண்டுகள் அதிகபட்ச வயதாக இருந்தது.

தற்போது அந்த வயது 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.துணை கமாண்டன்ட் அதிகாரியாக சேர வயது வரம்பு 38ல் இருந்து 43 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. 48 வயது வரையிலானவர்கள் கமாண்டன்ட் ஆக சேரலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X