பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அமைச்சர் மகேஷ் தகவல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : ''பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்து உள்ளார்.பள்ளிகள் திறப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்தோம். அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம்

சென்னை : ''பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்து உள்ளார்.



latest tamil news


பள்ளிகள் திறப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்தோம். அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, நவ., 1 முதல் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆலோசனை நடத்தப்பட்டது.


latest tamil news


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். பள்ளிகள் திறப்புக்கு முன், வளாகங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என, கலெக்டர்கள் வழியே உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இணை இயக்குனர்கள், மாவட்டங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு பணி மேற்கொள்வர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
30-செப்-202110:36:18 IST Report Abuse
தத்வமசி இளைய மருமகள் வந்த பிறகு தான் மூத்த மருமகளின் அருமை தெரியும் என்பார்கள். அதிமுக பணியாற்றவில்லை, சம்பாதிக்க முடியவில்லை என்று அங்கலைத்தவர்கள் இப்போது தலையில் கை வைத்துக் கொண்டுள்ளனர். வாழ்க விடியலுடன்..
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
30-செப்-202110:28:55 IST Report Abuse
vbs manian செங்கோட்டையன் பரவாயில்லை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
30-செப்-202109:03:55 IST Report Abuse
duruvasar சழற்ச்சி முறையில் விடியல் கிடைப்பது மகிழ்ச்சியே. மேசையில் தாங்கள் பார்த்து பார்த்து பரவசம் அடையும் உதயண்ணா படம் மிஸ்ஸிங். படத்தை வைத்து பார்த்து கொண்டிருந்தால் தங்கள் பணியில் இன்னும் கூடுதல் உத்வேகம் பிறக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X