கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிகாரமற்ற லோக் ஆயுக்தா சட்டம் ரத்து செய்ய ஐகோர்ட்டில் வழக்கு

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை:அதிகாரமற்ற தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி, துறையூரைச் சேர்ந்த குருநாதன் தாக்கல் செய்த மனு:பொது ஊழியர்கள், அமைச்சர்கள், முதல்வர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2013ல் மத்திய அரசு கொண்டு வந்தது.

மதுரை:அதிகாரமற்ற தமிழக லோக் ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி, துறையூரைச் சேர்ந்த குருநாதன் தாக்கல் செய்த மனு:பொது ஊழியர்கள், அமைச்சர்கள், முதல்வர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2013ல் மத்திய அரசு கொண்டு வந்தது.


பறிமுதல்

இதைப் பின்பற்றி தமிழக அரசு 2018ல் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்தது.பிரதமருக்கு எதிரான ஊழல் புகாரை, மத்திய அரசின் லோக்பால் அமைப்பு விசாரிக்க வழிவகை உள்ளது. லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக் குழுவில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக லோக் ஆயுக்தா அமைப்பு தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக் குழுவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் இடம் பெறவில்லை. மத்திய சட்டப்படி, ஆரம்ப கட்ட விசாரணை நடத்த தனிப் பிரிவு உள்ளது. மாநிலத்தில் அது போன்ற பிரிவு இல்லை.மத்திய சட்டப்படி, ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது.

மாநில லோக் ஆயுக்தாவிற்கு அது போன்ற அதிகாரம் இல்லை.லோக் ஆயுக்தா அதிகார வரம்பிற்குள் முதல்வர் வரமாட்டார்; விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அதிகாரமற்றதாக உள்ளது. மனு தாக்கல்அதை வலுவானதாக மாற்ற சட்டத்திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்.

தமிழக லோக் ஆயுக்தா சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வு, தமிழக தலைமை செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், சட்டத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, 12 வாரங்கள் ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X