சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜாலி செலவுக்காக திருட்டு இன்ஜினியர், காதலி கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஜாலியாக செலவு செய்ய 50 பவுன் நகை திருடிய இன்ஜினியர் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.மண்டைக்காடு அருகே சேரமங்கலத்தை சேர்ந்தவர் நர்ஸ் பேபிசுதா 44. கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். பேபிசுதாவின் தம்பி சுதர். மனைவி ஷர்மிலிமோள் 24. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜன., 27 ல் ஷர்மிலிமோள் அழைப்பின் பேரில் பேபிசுதா
 ஜாலி செலவுக்காக திருட்டு இன்ஜினியர், காதலி கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஜாலியாக செலவு செய்ய 50 பவுன் நகை திருடிய இன்ஜினியர் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
மண்டைக்காடு அருகே சேரமங்கலத்தை சேர்ந்தவர் நர்ஸ் பேபிசுதா 44. கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். பேபிசுதாவின் தம்பி சுதர். மனைவி ஷர்மிலிமோள் 24. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஜன., 27 ல் ஷர்மிலிமோள் அழைப்பின் பேரில் பேபிசுதா அவரது வீட்டுக்கு சென்றார்.அங்கு சர்ச் திருவிழாவில் கலந்து கொண்டு அடுத்த நாள் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 50 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.

எட்டு மாதங்களாக இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறினர். இந்நிலையில் திருட்டு நடந்த தினத்திலும் அடுத்த நாளும் பெத்தேல்புரம் பகுதியில் இரண்டு அலைபேசி எண்களில் அடிக்கடி பேசியதை கண்டு பிடித்து விசாரித்தனர்.ஒருவர் பபின் 27. ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியர். மற்றவர் ஷர்மிலிமோள். இவர்கள் அடிக்கடி வெளியூர் சென்று வந்ததையும் கண்டு பிடித்த மண்டைக்காடு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பேபிசுதா வீட்டில் திருடி அதை விற்று ஜாலியாக இருந்ததை ஒப்புக் கொண்டனர். கொரோனா காரணமாக ஆஸ்திரேலியாவில் வேலை இழந்து திரும்பிய பபினுக்கு, ஷர்மிலிமோளுடன் தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஜாலியாக செலவு செய்ய இருவரும் திட்டமிட்டு திருடியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X