பொது செய்தி

தமிழ்நாடு

வார்டு கவுன்சிலருக்கு ஓட்டு போட்டா 100 நாள் வேலை செய்ய வேண்டியதில்லை

Added : செப் 30, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்:'வார்டு உறுப்பினருக்கு ஓட்டளித்தால், 100 நாள் வேலை செய்ய வேண்டியதில்லை' என, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சலுகை காட்டப்படுகிறது. இது, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வேட்பாளரே வேட்டு வைப்பதாக உள்ளது.தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய

வாலாஜாபாத்:'வார்டு உறுப்பினருக்கு ஓட்டளித்தால், 100 நாள் வேலை செய்ய வேண்டியதில்லை' என, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சலுகை காட்டப்படுகிறது. இது, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு வேட்பாளரே வேட்டு வைப்பதாக உள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பலரும் போட்டியிடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் அக்., -6ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பல கட்சியினர், சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்; நேரடியாகவும், மறைமுகமாகவும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் பலர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இதில் ஒரு சிலர், 100 நாள் வேலைக்கு பணித்தள பொறுப்பாளர்களாக இருக்கின்றனர். வில்லிவலம் உள்ளிட்ட சில ஊராட்சிகளில், 100 நாள் வேலை செய்யும் பெண்களிடம், பணித்தளபொறுப்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

வில்லிவலம் கிராம மக்கள் கூறியதாவது:வில்லிவலம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், 100 நாள் பணித்தள பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.அவர், தனக்கு ஓட்டளிப்பதாக கூறிய பெண்களுக்கு கையெழுத்து மட்டும் பெற்று, வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். அவ்வாறு சொல்லாதவர்களை வேலை செய்ய வேண்டும் என, கட்டாயப்படுத்துகிறார்.

'நீங்களும் எனக்கு ஓட்டு போடுங்கள்; உங்களையும் அனுப்புகிறேன்' என, நயமாக பெண்களிடம் பேசி வருகிறார். இது, 100 நாள் வேலை திட்டத்திற்கு வேட்பாளரே வேட்டு வைப்பதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X