பொள்ளாச்சி வழக்கில் ரகசிய விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கில் ரகசிய விசாரணை

Added : செப் 30, 2021
Share
கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 'இன் கேமரா' முறையில் சாட்சி விசாரணை நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் 25 - 29 வயதுள்ள ஒன்பது வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மீது, கோவை மகளிர் நீதிமன்றத்தில்

கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 'இன் கேமரா' முறையில் சாட்சி விசாரணை நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில் 25 - 29 வயதுள்ள ஒன்பது வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் மீது, கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆறு மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க, ஆக., 10ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணைக்கு, சி.பி.ஐ.,க்கு உதவி செய்ய சி.பி.சி.ஐ.டி., - எஸ்.பி., முத்தரசி நியமிக்கப் பட்டார். கடந்த 21ம் தேதி, ஒன்பது பேருக்கும் 1,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. 64 சாட்சிகள் 71 ஆவணங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வீடியோ கான்பரன்சிங்கில் ஒன்பது பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு, 'இன் கேமரா' முறையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. கோவை மகளிர் நீதிமன்ற ஹாலில் விசாரணை நடத்தாமல், இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில், தனி அறையில் பாதிக்கப்பட்ட பெண்கள், சாட்சிகளை வரவழைத்து விசாரணை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விசாரணையில், இரு தரப்பு வக்கீல்கள் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள், சாட்சிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X