பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் மாசடைந்த வைகை

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகை கடந்த சில நாட்களாக கழிவு நீரால் மாசடைந்து வருகிறது.மதுரை மாவட்ட மொத்த கழிவு நீரும் சுத்திகரிக்கப்படாமல் வைகை ஆற்றினுள் திறந்து விடப்படுகிறது. மதுரை விரகனுார் அணையில் தேங்கும் கழிவு நீர் மழை காலங்களில் வைகை ஆற்றினுள் திறந்து விடப்படுகிறது. பாசி படர்ந்து பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் வரும் கழிவு நீரால்
 திருப்புவனத்தில் மாசடைந்த வைகை

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகை கடந்த சில நாட்களாக கழிவு நீரால் மாசடைந்து வருகிறது.

மதுரை மாவட்ட மொத்த கழிவு நீரும் சுத்திகரிக்கப்படாமல் வைகை ஆற்றினுள் திறந்து விடப்படுகிறது. மதுரை விரகனுார் அணையில் தேங்கும் கழிவு நீர் மழை காலங்களில் வைகை ஆற்றினுள் திறந்து விடப்படுகிறது. பாசி படர்ந்து பச்சை நிறத்தில் துர்நாற்றத்துடன் வரும் கழிவு நீரால் திருப்புவனம் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து அருப்புக்கோட்டை, மதுரை கிழக்கு, திருப்புவனம் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.மாசு பட்ட குடிநீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கழிவு நீர் குறித்து பொதுப்பணித்துறையிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. குடிநீர் துர்நாற்றத்துடன் வருவதால் பலரும் பணம் கொடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். பொதுப்பணித்துறையினர் வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X