பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை - சென்னை பஸ்கள் நிறுத்தம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையிலிருந்து - சென்னைக்கு போதிய அரசு பஸ்களின்றி சிவகங்கை மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். சிவகங்கையில் இருந்து சென்னைக்கு 2 அரசு பஸ், ஒரு ஏ.சி., பஸ் இயக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, வீரசோழன், ஒப்பிலான் மற்றும் துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் அனைத்தும் சிவகங்கை வழியே இயங்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக சிவகங்கையில்

சிவகங்கை : சிவகங்கையிலிருந்து - சென்னைக்கு போதிய அரசு பஸ்களின்றி சிவகங்கை மாவட்ட பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

சிவகங்கையில் இருந்து சென்னைக்கு 2 அரசு பஸ், ஒரு ஏ.சி., பஸ் இயக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, வீரசோழன், ஒப்பிலான் மற்றும் துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் அனைத்தும் சிவகங்கை வழியே இயங்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக சிவகங்கையில் இருந்து ஒரு பஸ் மட்டுமே சென்னை செல்கிறது.

மற்ற இரண்டு (ஏ.சி., பஸ் உட்பட) பஸ் மற்றும் கமுதியில் இருந்து சிவகங்கை வழியே சென்னை செல்லும் பஸ் நிறுத்தப்பட்டன. இது தவிர ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சிவகங்கை வழியே சென்னை செல்லும் பஸ்களும் சிவகங்கைக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. அரசு பஸ்களின் செயல்பாட்டால் சிவகங்கையில் தினமும் 12 தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக சென்னைக்கு செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X