இன்றும், நாளையும் நடக்கிறது கல்லுாரிகளில் தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் நடக்கிறது கல்லுாரிகளில் தடுப்பூசி முகாம்

Added : செப் 30, 2021
Share
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கல்லுாரிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 12,50,591 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 59.77 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏதுவாக இன்றும், நாளையும் (அக். 1) இரு நாட்கள் கல்லுாரிகளில்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கல்லுாரிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 12,50,591 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு 59.77 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த ஏதுவாக இன்றும், நாளையும் (அக். 1) இரு நாட்கள் கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.இன்று ராஜபாளையத்தில் ராம்கோ பொறியியல் கல்லுாரி, ராஜூஸ் கல்லுாரி, ஏ.கே.டி.தர்மராஜா மகளிர் கல்லுாரி, ஆறுமுகம் பழனிக்குரு கல்லுாரி, ஸ்ரீவி., வி.பி.எம்., கல்லுாரி, பெல் இன்ஸ்டிடியூட், அக்ஷயா, சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லுாரி, கலசலிங்கம் கல்லுாரி நிறுவனங்கள், வெம்பக்கோட்டை எஸ்.எம்.எஸ்., கல்லுாரி, சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.,கல்லுாரி, சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரி, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி, எஸ்.பி.கே.,கல்லுாரி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரிநாளை ஸ்ரீவி.,ரைட்டன்பட்டி அரசு கல்லுாரி, பாலகிருஷ்ணன் கல்லுாரி, சாத்துார் பி.எஸ்.என்.எல்., கல்லுாரி, விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி, வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி, கலைமகள் கல்லுாரி, ரமணாஸ் கல்லுாரிகளில் தடுப்பூசி போடப்படுகிறது,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X