கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கூட்டு பலாத்காரம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கடலுார்:பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிகள் இருவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த, 13 வயது மாணவி, ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 2019 பிப்., 12ம் தேதி இரவு, அப்பகுதியில் நடந்து சென்ற மாணவியை குமாரகுடியைச் சேர்ந்த திலகர், 34; ஜெய்சங்கர், 49; இருவரும் மறைவான பகுதிக்கு துாக்கி சென்று,

கடலுார்:பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிகள் இருவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த, 13 வயது மாணவி, ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 2019 பிப்., 12ம் தேதி இரவு, அப்பகுதியில் நடந்து சென்ற மாணவியை குமாரகுடியைச் சேர்ந்த திலகர், 34; ஜெய்சங்கர், 49; இருவரும் மறைவான பகுதிக்கு துாக்கி சென்று, கூட்டு பலாத்காரம் செய்தனர்.

கோவில் அருகே மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை, பெற்றோர் மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சிறுமியின் பெற்றோர், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.திலகர், ஜெய்சங்கர் இருவரையும் கைது செய்து, கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 30 நாட்களுக்குள் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தற்கொலை நாடகம்?

சாகும் வரை சிறை தண்டனை விதித்ததும்,குற்றவாளியான ஜெய்சங்கர் கதறினார். தான் மறைத்து வைத்திருந்த வெள்ளையான பொருளை வாயில் போட்டுக் கொண்டார். அவர் ஏதாவது விஷத்தை வாயில் போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்பதால், பணியில் இருந்த போலீசார் பதற்றமாகினர். உடனடியாக அவரை, கழிப்பறை அழைத்துச் சென்று வாயில் இருந்த பொருளை வெளியே எடுத்தனர். இதனால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X