பொது செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றும் ஆம்னி பஸ்கள் மானாமதுரையில் பயணிகள் அவதி

Added : செப் 30, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளை தனியார் பஸ் நிர்வாகத்தினர் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.மானாமதுரை வழியாக தினமும் சென்னைக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம்,பரமக்குடி,பார்த்திபனுார் பகுதிகளில் இருந்து வரும் தனியார் பஸ்கள் மானாமதுரை வழியாக செல்லும் நிலையில் மானாமதுரையைச் சேர்ந்த பயணிகள் பலர்

மானாமதுரை : மானாமதுரையில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளை தனியார் பஸ் நிர்வாகத்தினர் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

மானாமதுரை வழியாக தினமும் சென்னைக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரம்,பரமக்குடி,பார்த்திபனுார் பகுதிகளில் இருந்து வரும் தனியார் பஸ்கள் மானாமதுரை வழியாக செல்லும் நிலையில் மானாமதுரையைச் சேர்ந்த பயணிகள் பலர் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் போது அவர்கள் ஏறும் பஸ் ஸ்டாப் பெயரை குறிப்பிட்டு பதிவு செய்கின்றனர்.ஆனால் பெரும்பாலான நாட்களில் பஸ் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் டிக்கெட் பதிவு செய்த பயணிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் நீங்கள் குறிப்பிட்ட ஸ்டாப்பிற்கு பஸ் வராது,

புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்தால் மட்டுமே அழைத்து செல்வோம் என கூறுவதால் காந்தி சிலை,அண்ணாத்துரை சிலை,யூனியன் ஆபிஸ்,சிப்காட் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.அவர்கள் கூறுகையில், ஆன்லைனில் பதிவு செய்யப்படும் போது எந்த ஸ்டாப்பில் ஏற வேண்டும் என கேட்கிறார்கள்,ஆனால் பஸ் கிளம்பும் போது அந்த ஸ்டாப்புகளுக்கு பஸ் வராது விரைவில் புது பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டும் என கூறுகிறார்கள்,இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X