சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் நிறுவனத்திற்காக 'பஸ் ஸ்டாப்' அகற்றம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட பஸ் ஸ்டாப்பை போலீசார் அப்புறப்படுத்தியதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே, 1988 முதல் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, கட்டண சிகிச்சையுடன், முகாம்களில் தேர்வு செய்யப்படுவோருக்கு இலவச கண் ஆப்பரேஷன் மேற்கொள்ளப்படுகிறது.இதனால், தென்
 தனியார் நிறுவனத்திற்காக 'பஸ் ஸ்டாப்' அகற்றம்

திருநெல்வேலி:திருநெல்வேலியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்ட பஸ் ஸ்டாப்பை போலீசார் அப்புறப்படுத்தியதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

திருநெல்வேலி ஜங்ஷன் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே, 1988 முதல் அரவிந்த் கண் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, கட்டண சிகிச்சையுடன், முகாம்களில் தேர்வு செய்யப்படுவோருக்கு இலவச கண் ஆப்பரேஷன் மேற்கொள்ளப்படுகிறது.இதனால், தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் கண் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

மருத்துவமனை முன், மாநகர பஸ்கள் நின்று செல்லும் பஸ் ஸ்டாப்பில், நேற்று முன்தினம் பயணியரை நிற்க விடாமல் போலீசார் துரத்தினர். பஸ் ஸ்டாப்பை அகற்றியதோடு, மக்கள் நிற்க முடியாதபடி தடுப்புகளை வைத்துள்ளனர். பஸ் ஸ்டாப்பை, ஆற்றுப்பாலம் தாண்டி, கலெக்டர் அலுவலகம் அருகே கொக்கிரகுளத்திற்கு மாற்றியுள்ளனர். இதனால் கண் நோயாளிகள், பொதுமக்கள் அங்கிருந்து நடந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


பின்னணி என்ன?

அங்குள்ள அரசு ஊழியர் சங்க கட்டடம் ஒன்றில், புதிதாக ஒரு தனியார் அலைபேசி விற்பனை நிறுவனம் அமைய உள்ளது. அதற்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை சாலையில் நிறுத்துவர். போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே, பஸ் ஸ்டாப்பை அப்புறப்படுத்தி விட்டால்,தனியார் அலை பேசி கடை முன் வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமம் இருக்காது என போலீஸ் அதிகாரிகள் சிலர் தந்த ஆலோசனையால், பஸ் ஸ்டாப்அகற்றப்பட்டது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X