சைனிக் பள்ளி அட்மிஷன் ஜன., 5ல் நுழைவுத்தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சைனிக் பள்ளி 'அட்மிஷன்' ஜன., 5ல் நுழைவுத்தேர்வு

Added : செப் 30, 2021
Share
உடுமலை:உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு ஜன., 5ல் நடக்க உள்ளது.ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 - 23ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு, 2022 ஜன., 5ல்

உடுமலை:உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு ஜன., 5ல் நடக்க உள்ளது.

ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும், திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 - 23ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு, 2022 ஜன., 5ல் நடக்கிறது. விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பது, செப்., 27 முதல் துவங்கி உள்ளது.விண்ணப்பங்கள் பெறுவதற்கும், கட்டணம் மற்றும் சேர்க்கை குறித்த கூடுதல் விபரங்களுக்கும், https://aissee.nta.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். அக்., 26 வரை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை, பள்ளி முதல்வர் நிர்மல் ரகு தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X