பொது செய்தி

தமிழ்நாடு

அழிவின் விளிம்பில் அருப்புக்கோட்டை கண்மாய்

Added : செப் 30, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : சாயக்கழிவுகள் கலக்கம், ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு என அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் அழியும் நிலையில் உள்ளது.இதோடு நிலத்தடி நீருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு அருகில் உள்ளதுபெரிய கண்மாய். 100 ஏக்கருக்கும் மேல் பரப்பளவில் உள்ள இக்கண்மாய் ஒரு காலத்தில் தண்ணீர் நிறைந்து விவசாயம் செழித்தும், நகர மக்களின்
 அழிவின் விளிம்பில் அருப்புக்கோட்டை கண்மாய்

அருப்புக்கோட்டை : சாயக்கழிவுகள் கலக்கம், ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு என அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் அழியும் நிலையில் உள்ளது.

இதோடு நிலத்தடி நீருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு அருகில் உள்ளதுபெரிய கண்மாய். 100 ஏக்கருக்கும் மேல் பரப்பளவில் உள்ள இக்கண்மாய் ஒரு காலத்தில் தண்ணீர் நிறைந்து விவசாயம் செழித்தும், நகர மக்களின் சுற்றுதலமாக இருந்தது. விடுமுறை நாட்களில் மக்கள் இங்கு வந்து குளிப்பதும், குழந்தைகளுக்கு நீச்சல் கற்று தருவதுமாக பயன்பட்டது. இப்பபகுதியில் உள்ள 300 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்கள் கண்மாய் பாசனத்தினால் செழித்திருந்தது. நெல் விளைச்சலும் அமோகமாக இருந்தது. நெல் அறுவடைக்கு பின் கத்தரி, வெண்டைகாய், சுரக்காய், வெள்ளரி என விவசாயிகள் பயரிட்டனர். கால்நடைகளுக்கு தேவையான நாற்றும் நட்டு வளர்த்து வந்தனர். கண்ணிற்கு குளிர்ச்சியாக இருந்த கண்மாய் முறையான பராமரிப்பு இல்லாமல் போனது. கண்மாயில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பால் கண்மாயில் மிச்சமிருக்கும் தண்ணீருக்கு வேட்டு வைக்கிறது. நகரில் உள்ள ஒட்டு மொத்த கழிவு நீரும் கண்மாயில் விடப்பட்டு சுகாதாரக் கேடாக மாறி விட்டது.இதுதவிர கண்மாயில் நகரில் உள்ள சாயப்பட்டறை கழிவுகள் விடப்படு தண்ணீர் விஷமாக மாறி விட்டது. நிலத்தடி நீரும் பாதிக்கிறது. விவசாயத்துக்கு இத்தண்ணீரை பயன்படுத்தினால் பயிர்கள் கருகி விடுவதால், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். நுரை பொங்கி வரும் தண்ணீரை நிலத்தில் விட விவசாயிகள் பயப்படுகின்றனர்.சாய கழிவுகளினால் கண்மாயில்மீன் வளர்ப்பு செய்ய முடியவில்லை. கண்மாய்க்கு மழை நீர் வரும் புளியம்பட்டி தெப்பகுள ஓடை அடைபட்டு ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழை நீர் வரவும் முடியவில்லை.இதனால் கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகள் பல ஏக்கர் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது

.அரசின் அலட்சியத்தால் சிறப்பு வாய்ந்த கண்மாய் சீரழியும் நிலைக்கு வந்து விட்டது.சாய கழிவுகளால் கருகும் பயிர்கள்ரவி, விவசாயி: கண்மாயை யொட்டிய பகுதியில் 40 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். நெல், புடலை, பீர்க்கை, வெள்ளரி, மாட்டிற்கு தீவன புல் என விவசாயம் செய்து வந்தோம். கண்மாயில் என்றைக்கு சாயப்பட்டறை கழிவுகள் கலந்ததோ அன்றிலிருந்து விவசாயமும் கெட்டு விட்டது.தண்ணீர் விஷ தன்மையாக மாறி விட்டது.எந்த பயிர் போட்டாலும் முளைப்பதில்லை. நிலமும் சிறிது சிறிதாக கெட்டு விட்டது.மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அலட்சியத்தால் விவசாயம் ஒட்டு மொத்தமாக பாதிப்பு அடைந்து விட்டது.விவசாயத்துக்கு வழி இல்லைமுத்துமுனியாண்டி, விவசாயி: 45 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன்.சாய கழிவுகள், நகரின் ஒட்டு மொத்த சாக்கடை கழிவுகளும் கண்மாயில் விடுவதால் தண்ணீர் கெட்டு விட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். ஒரு காலத்தில் நகரின் குடிநீர் தேவை ,புழக்கத்திற்கு இக்கண்மாய் நீர் தான் பயன்பட்டது. தற்போது பராமரிப்பின்றி அழியும் நிலைக்கு வந்து விட்டது. விவசாயிகள் அதிக பாதிப்பில் உள்ளனர்.இருக்கு ஆனா இல்லைசிலம்பரசன், விவசாயி: கண்மாயில் இருக்கும் தண்ணீரை அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயதாமரைகள் உறிஞ்சி விடுகின்றன.இவற்றை அப்புறப்படுத்தாது பொது பணித்துறை வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு பெயருக்கு அகற்றி கடமையை நிறைவேற்றியனர் .விவசாயிகள், நிலம் இருந்தும், தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளோம்.நடவடிக்கை தேவைகணேசன், பெரிய கண்மாய் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்க தலைவர்: மோசமான நிலையில் பெரிய கண்மாய் உள்ளது

. சாய கழிவுகள், கழிவு நீர்கள், ஆகாயதாமரைகள் என வரிசை கட்டி நிற்பதால், கண்மாய் அழியும் நிலையில் உள்ளது.சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்த பின் தண்ணீரை விட மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவுறுத்த வேண்டும். ஆனால் வாரியம் இதுபற்றி கவலைப்படுவதே இல்லை. நகராட்சியின் ஒட்டு மொத்த கழிவு நீரும் கண்மாயில் சேர்கிறது. இதற்கு மாற்று வழி குறித்து நகராட்சி யோசிப்பதும் இல்லை. இவர்களின் அலட்சியத்தால் விவசாயம்கெட்டு அழியும் நிலைக்கு வந்து விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X