சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செக்போஸ்ட்களில் சோதனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் செக்போஸ்ட்களை சரிகட்டி கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இரண்டு செக்போஸ்ட்களில் சோதனை நடைபெற்றதில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கல், மணல், பாறைதுாள் போன்ற கனிம பொருட்கள் கேரளாவுக்கு தடையின்றி கடத்தப் படுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால்
 செக்போஸ்ட்களில்  சோதனை

நாகர்கோவில்:கன்னியாகுமரியில் செக்போஸ்ட்களை சரிகட்டி கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து இரண்டு செக்போஸ்ட்களில் சோதனை நடைபெற்றதில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கல், மணல், பாறைதுாள் போன்ற கனிம பொருட்கள் கேரளாவுக்கு தடையின்றி கடத்தப் படுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. பீட்டர்பால் தலைமையில் போலீசார் ஆரல்வாய்மொழி, களியக்காவிளை செக்போஸ்ட்களில் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ஆயிரக்கணக்கில் பணமும் கைப்பற்றப்பட்டது.

இந்தப்பணம் பெரும்பாலும் சுருட்டி ரப்பர் பேன்ட் போடப்பட்டிருந்தது. இதுபற்றி அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தப் பட்டது. தொடர் விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X