கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலையில் கணவருக்கு ஆயுள்: மகன் உட்பட இருவருக்கு 2 ஆண்டு சிறை

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனையும், அவரது மகன் உள்ளிட்ட இருவருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ராமநாதபுரம் அருகே புல்லங்குடியை சேர்ந்தவர் சண்முகம் 53. ஊரில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில்,
 மனைவி கொலையில் கணவருக்கு ஆயுள்: மகன் உட்பட இருவருக்கு 2 ஆண்டு சிறை

ராமநாதபுரம்:மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனையும், அவரது மகன் உள்ளிட்ட இருவருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் அருகே புல்லங்குடியை சேர்ந்தவர் சண்முகம் 53. ஊரில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி இறந்த நிலையில், செங்கல் சூளையில் வேலை செய்த கனகா 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். அவருக்கு 14 வயதில் மகள் உள்ளார்.

கனகா வேறு ஒருவருடன் பழகியுள்ளார். இதனை சண்முகம், அவரது மகன் பிரவின்குமார் 32, கண்டித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து பழகியதால் ஆத்திரம் அடைந்த சண்முகம், மகன் ஆகியோர் 2017 ஜூலை 25ல் கட்டையால் தாக்கினர்.அவரை உறவினர் முருகன் காரில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கால் முறிவுக்கு கட்டு போடுவதாக கூறி மீண்டும் அழைத்து சென்று கனகாவை தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கி சண்முகம் கொலை செய்தார்.

உடந்தையாக பிரவின்குமார், முருகன் இருந்துள்ளனர். கேணிக்கரை போலீசார் மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் மனோரஞ்சிதம் ஆஜரானார்.நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஏ.சுபத்ரா, மனைவியை கொலை செய்த சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தார்.

கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை, கொலைக்கு உடந்தையாக இருந்த பிரவின்குமார், முருகனுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1000 அபராதம், கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X