சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்கள் மோதல் தந்தை, மகள் பலி

Added : செப் 30, 2021
Share
Advertisement
சிவகாசி:சிவகாசியில் டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் லட்சுமியாபுரத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளி முருகன் 40, மகள் முத்துலட்சுமி 8, பலியாகினர். மனைவி, மகன் உட்பட மூவர் காயமடைந்தனர்.சிவகாசி லட்சுமியாபுரத்தை சேர்ந்த முருகன் , மனைவி வெங்கடேஸ்வரி 32, மகள் முத்துலட்சுமி 8, மகன் முனிப்பாண்டி 7, உடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிவகாசி சென்றார். சித்துராஜபுரத்தைசேர்ந்த

சிவகாசி:சிவகாசியில் டூவீலர்கள் நேருக்குநேர் மோதியதில் லட்சுமியாபுரத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளி முருகன் 40, மகள் முத்துலட்சுமி 8, பலியாகினர். மனைவி, மகன் உட்பட மூவர் காயமடைந்தனர்.

சிவகாசி லட்சுமியாபுரத்தை சேர்ந்த முருகன் , மனைவி வெங்கடேஸ்வரி 32, மகள் முத்துலட்சுமி 8, மகன் முனிப்பாண்டி 7, உடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிவகாசி சென்றார். சித்துராஜபுரத்தைசேர்ந்த கல்லுாரி மாணவரான ஹரீஸ்நாத் 24, எதிரே டூ வீலரில் வந்தார். பழைய டி.எஸ்.பி., அலுவலகம் அருகே வந்தபோது டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதின. இதில் முத்துலட்சுமி, முருகன் இறந்தனர். காயமடைந்த வெங்கடேஸ்வரி, முனிப்பாண்டி, ஹரீஸ் நாத் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X