பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் கால மீட்பு பணி: அதிகாரிகள் முன்னேற்பாடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சிவகங்கை : பேரிடர் காலங்களில் செய்யப்படும் பணிகள் குறித்து முன் ஏற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் மதுசூதனன்ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம், வேளாண்துறை, மின்வாரியம், கால்நடை பராமரிப்பு, குடிநீர் வடிகால்வாரியம், மீன் வளத்துறை,

சிவகங்கை : பேரிடர் காலங்களில் செய்யப்படும் பணிகள் குறித்து முன் ஏற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் மதுசூதனன்ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம், வேளாண்துறை, மின்வாரியம், கால்நடை பராமரிப்பு, குடிநீர் வடிகால்வாரியம், மீன் வளத்துறை, தீயணைப்புத்துறையினர் பங்கேற்றனர்.அனைத்து துறையினரும் பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதுமான முன்னேற்பாடு வசதிகளை செய்து கொள்ள வேண்டும். பருவமழை காலத்தில் அனைத்து துறைகளும் கண்காணிப்பு செய்து, உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையினர் சார்பில் பேரிடர்காலங்களில் மீட்பு பணிகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.டி.ஆர்.ஓ., மணிவண்ணன், டி.எஸ்.பி., பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) சிவராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது ரெத்தினவேல், ஆர்.டி.ஓ.,க்கள் சிவகங்கை முத்துக்கழுவன், தேவகோட்டை பிரபாகரன், சுகாதாரஇணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் ராம்கணேஷ்,மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சத்தியகீர்த்தி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X