கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' பெண் நிர்வாகி புகார் பா.ஜ., பிரமுகரிடம் விசாரணை

Added : செப் 30, 2021
Share
Advertisement
விழுப்புரம்:விழுப்புரத்தில், பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி அளித்த புகார்படி, மாவட்ட தலைவரிடம் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார்.10 லட்சம் ரூபாய் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ., மகளிரணி முன்னாள் நிர்வாகி ஒருவர், சில மாதங்களுக்கு முன் மாவட்ட பா.ஜ., தலைவர் கலிவரதன் மீது எஸ்.பி., அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துஇருந்தார்.நடவடிக்கை எடுக்காத

விழுப்புரம்:விழுப்புரத்தில், பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி அளித்த புகார்படி, மாவட்ட தலைவரிடம் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார்.


10 லட்சம் ரூபாய்



விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த பா.ஜ., மகளிரணி முன்னாள் நிர்வாகி ஒருவர், சில மாதங்களுக்கு முன் மாவட்ட பா.ஜ., தலைவர் கலிவரதன் மீது எஸ்.பி., அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துஇருந்தார்.நடவடிக்கை எடுக்காத சூழலில், வடக்கு மண்டல ஐ.ஜி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'என்னிடம் மாவட்ட பா.ஜ., தலைவர் கலிவரதன் 10 லட்சம் ரூபாய் ஏமாற்றி வாங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தரவேண்டும்' எனக் கூறியிருந்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்த, விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பழனிசாமிக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

இதையடுத்து, மகளிரணி பிரமுகருக்கும், கலிவரதனுக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.ஆஜராக வேண்டும்நேற்று கலிவரதன், விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடமும் அந்த பெண்ணிடமும், டி.எஸ்.பி., பழனிசாமி தனித்தனியே விசாரணை நடத்தினார். அந்த பெண்ணிடம், பணம் கொடுத்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி டி.எஸ்.பி., கூறியுள்ளார். அக்டோபர் 15ல் மீண்டும் ஆஜராக வேண்டும் என இருவரிடமும் தெரிவிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X