பாதிரியார் வழக்கு ரத்து செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்சேபம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார் வழக்கு ரத்து செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்சேபம்

Added : செப் 30, 2021
Share
மதுரை:பாதிரியாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டவிரோதமாகக் கூடி, ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் வழக்கு பதிந்தனர்.ஜார்ஜ் பொன்னையாவை ஜூலை 24ல் கைது செய்தனர். அவருக்கு உயர் நீதிமன்ற

மதுரை:பாதிரியாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டவிரோதமாகக் கூடி, ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டும் வகையில் பேசியதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் வழக்கு பதிந்தனர்.ஜார்ஜ் பொன்னையாவை ஜூலை 24ல் கைது செய்தனர். அவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆக., 10ல் நிபந்தனை ஜாமின் அனுமதித்தது.

அவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரினார்.நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். குமரி மாவட்ட வி.எச்.பி., தலைவர் குமரேசதாஸ், 'மனுதாரர் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திஉள்ளார். வழக்கை ரத்து செய்யக்கூடாது' என ஆட்சேபித்து மனு தாக்கல் செய்தார். நீதிபதி நவ., 12க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X